கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குட்லக் சகி.. ஓடிடியில் ரிலீஸ்?
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண் குயின் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது இவரின் மற்றொரு திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் அதேசமயம் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்துக்கொண்டு வருகிறார்.
இந்தியா முழுவதும் திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்ட நிலையில் திரைப்படங்கள் எதுவும் திரையில் வெளியிடாத முடியாததால், பலரும் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட தயாராகிக் கொண்டு வரும் நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் பெண் குயின் திரைப்படத்தை தொடர்ந்து மற்றொரு திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என தெரிகிறது.

முன்னணி கதாநாயகியாக
தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல முன்னாள் நடிகையின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கண்முன் கொண்டுவந்து
இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியான மகாநடி திரைப்படத்தில் நடித்து, மிகப்பெரிய புகழையும் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் சாவித்திரியை கண்முன் கொண்டுவந்து நிறுத்திய தனது சிறந்த நடிப்பிற்காக பெற்று வெற்றி வலம் வந்தார்.

நேரடியாக ஓடிடியில்
மகாநடி என்கிற நடிகையர் திலகம் திரைப்படத்தை தொடர்ந்து இவரின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியான பெண் குயின் திரைப்படம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பெண் குயின் திரைப்படத்தில் இதுவரை நடித்திராத இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மிரட்டலான நடிப்பில் அனைவரையும் மிரட்டி எடுத்திருந்தார்.

ஆதி முக்கியமான கதாபாத்திரத்தில்
பெண் குயின் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தெலுங்கில் இவர் நடித்து வரும் "குட் லக் சகி" திரைப்படத்தின் டீசர் ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிகர் ஆதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

துப்பாக்கி சுடும் போட்டியில்
எப்பொழுதும் துருதுருப்புடனும் , ராசி இல்லாதவள் என பலராலும் தூற்றப்படும் ஒரு சாதாரண கிராமத்துப் பெண் இந்திய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் எவ்வாறு சாதனை படைக்கிறாள் என்ற கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் "குட் லக் சகி" படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது.

ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் தியேட்டர்கள் எப்போது திறக்கும் என உறுதியாக தெரியாததால் பெண் குயின் திரைப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள "குட் லக் சகி" திரைப்படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஓடிடி நிறுவனங்கள் பெண் குயின் திரைப்படத்தை வாங்கிய விலையை விட அதிகமான விலைக்கு "குட் லக் சகி" திரைப்படத்தை வாங்க தயாராக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதைக்கேட்ட கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











