அப்ப உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. இப்ப நடிகை கீர்த்தி சுரேஷ்.. அசத்தும் இன்னொரு டூப்ளிகேட் நடிகை!
சென்னை: ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றம் கொண்ட பெண், டிக்டாக்கில் கலக்கியதை போல, இப்போது இன்னொரு ஹீரோயினின் டூப்ளிகேட் வீடியோவும் இணையத்தில் ரவுண்ட் அடிக்கிறது.
Recommended Video
இந்த லாக்டவுன் நேரத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பலர் தங்கள் நடிப்பு ஆசையை இதன் மூலம் தீர்த்து வருகின்றனர்.
பிரபல நடிகையும், உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ஒருவர், வெளியிட்ட டிக் டாக் வீடியோ, கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலானது.

டிக் டாக் வீடியோ
நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசலாக இருக்கும் அந்தப் பெண், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நடிகர் மம்மூட்டியிடம் பேசும் வசனத்தை டிக் டாக் வீடியோவில் அப்படியே பேசி சமீபத்தில் அசத்தியிருந்தார். இந்த வீடியோ வைரலானது. இதற்கு முன்னும் அவர் நடித்த படங்களின் வசனங்களை அப்படியே பேசி வெளியிட்ட வீடியோக்களும் ரசிக்கப்பட்டன.

அம்ருதா சஞ்சு
இதையடுத்து இவரது டிக்டாக் வீடியோவுக்கு ரசிகர்கள் குவிந்தனர். அந்தப் பெண், கேரளா மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த அம்ருதா சஞ்சு என தெரியவந்தது. அவர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து இப்போது அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் தோற்றம்
பிகாசோ என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்கிறார். சுனில் கரியாட்டுக்கரா என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை சேக் அப்சல் தயாரித்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் போல தோற்றம் இன்னொரு பெண்ணின் டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது. அவர் பெயர் மரியா பிரின்ஸ். இவர் கீர்த்தி சுரேஷ் போல இருப்பதாக நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர்.

சினிமா வாய்ப்பு
இருவரது தோற்றத்தையும் ஒப்பிட்டு வருகின்றனர். ஆனால் மரியா, கீர்த்தி சுரேஷின் பட வசனங்களை பேசி வீடியோ எடுக்கவில்லை. நடிகைகள் மஞ்சுவாரியர், ஊர்வசி ஆகியோரின் பட வசனங்களை டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அவர் சிறப்பாக நடிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். அடுத்து இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











