ரிசார்ட் ஓனருடன் கீர்த்தி சுரேஷ் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ் அம்மா!
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளித் தோழரான ரிசார்ட் ஓனரை காதலித்து வருவதாக பரவிய வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் அம்மா மேகனா விளக்கம் கொடுத்துள்ளார்.
வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்
ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திற்கு பிறகு, தமிழில் இவருடைய படங்கள் எதுவும் வெற்றி பெறாத காரணத்தினால் தற்போது மார்க்கெட்டை இழந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்
கொழுக்கு மொழுக்கு நடிகையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், திடீரென என்ன நினைத்தாரோ, ஓவர் டயட்டை பாலோ செய்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். பட வாய்ப்புக்காக உடல் எடை குறைந்த அம்மணிக்கு அதன் பிறகு தான் படங்களே சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்
கீர்த்தி சுரேஷ் நடித்த, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா, வாஷி என அடுத்தடுத்து வெளியான அனைத்துப்படங்களும் பிளாப்பாகின. இதனால், அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவியது. அதுமட்டுமில்லாமல், இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருவதாகவும் ஒரு வதந்தி பரவியது.

ரிசார்ட் ஓனருடன் 13 வருட காதலா?
தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த 13 ஆண்டுகளான பள்ளி தோழரான, ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இவர்களில் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால்,கீர்த்தி சுரேஷ் காதலிக்கும் அந்த ரிசார்ட் ஓனர் யார்? என்று எந்த தகவலும் தெரியாததால், இது உண்மையான தகவலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் அம்மா மேக்னா, இணையத்தில் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், முழுக்க முழுக்கப் பொய்யான, பரபரப்புக்காகக் கிளப்பி விடப்பட்டிருக்கிற செய்தி. இதுபோல் வெளியாகும் எந்தச் செய்தியையும் பார்க்கக் கூட நாங்கள் விரும்பவில்லை. கீர்த்தியின் திருமணம் தொடர்பான இணையத்தில் பரவிவரும் வதந்திக்கு எங்களுடைய பதில் இதுதான். இதுபற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை என கோபத்துடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











