’பொன்மகள் வந்தாள்’ படத்துக்குப் பிறகு.. இந்த ஹீரோயின் படமும் ஓடிடி பிளாட்பார்ம்ல வெளியாகுதாம்ல?
சென்னை: பொன்மகள் வந்தாள் படத்தை அடுத்து இந்த ஹீரோயின் நடித்துள்ள படமும் நேரடியாக ஓடிடி பிளாட்பார்மில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், இப்போது மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மரைக்காயர்
பீரியட் படமான இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லால் ஹீரோ. மற்றும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், சுதீப், அசோக் செல்வன் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். லாக்டவுன் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

ரஜினியின் அண்ணாத்தே
இதையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்கனூர் இயக்கும் குட்லக் சகி என்ற படத்திலும் ரங்க் தே என்ற படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை சிவா இயக்குகிறார். இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. டி.இமான் இசை அமைக்கிறார்.

பெஞ்ச் ஸ்டோன்
இதற்கு அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெங்குயின். இதை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் ஸ்டோன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் எப்போதோ முடிந்துவிட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. ரிலீஸுக்கு ரெடியாக இருந்த நேரத்தில் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள்
இந்நிலையில் இந்தப் படத்தை டிஜிட்டலில் நேரடியாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் பெரும்பாலும் அது முடிந்துவிடும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உட்பட சில படங்கள் நேரடியாக டிஜிட்டலில் வெளியாக உள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் படம் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications