பெண்குயின் டிரைலர் ரிலீஸ்.. மகனை காப்பாற்ற சைக்கோ கொலைகாரனுடன் போராடும் ஒரு தாயின் கதை!
சென்னை: கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு ரிலீஸ் செய்த போதே கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
Recommended Video
இந்நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் 2 நிமிட டிரைலரில் இந்த த்ரில்லர் படத்தை தாராளமாக பார்க்கலாம் என்ற அளவுக்கு அற்புதமாக டிரைலரை கட் பண்ணி உள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் மிரட்டும் பின்னணி இசை மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு 'அட' போட வைக்கிறது.

அடுத்த OTT ரிலீஸ்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைத் தொடர்ந்து அடுத்த நேரடி OTT ரிலீஸ் படமாக கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படம் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைமில் இந்த படம் ப்ரீமியர் செய்யப்படுகிறது. தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அமேசான் புதுப் படங்களை வாங்கி ரிலீஸ் செய்து வருகிறது.

ரிலீஸ் செய்த பிரபலங்கள்
தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், மலையாள டிரைலரை மோகன் லாலும், தெலுங்கு டிரைலரை நடிகர் நானியும் அறிவிக்கப்பட்டதை போல தற்போது வெளியிட்டுள்ளனர். தொடரி படத்தில் தனுஷுடனும், அரபிக் கடலின் சிங்கம் படத்தில் மோகன் லாலுடனும் நேனு லோக்கல் படத்தில் நானி உடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைலர் எப்படி இருக்கு
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள பெண்குயின் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது மகன் அஜயை தொலைத்து விட்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் தேடி அலைய, போலீசார் அடர்ந்த காட்டுக்குள் தேட முடியாது என கைவிரிக்க, சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த சைக்கோ கொலைகாரனின் பிடியில் இருந்து தனது மகனை மீட்க ஒரு தாய் எப்படி போராடுகிறாள் என்பதை செம ஷார்ப்பாக டிரைலர் மிரட்டுகிறது.

டிரெண்டிங்
2018ம் ஆண்டு ஒரே வருஷத்தில் 6 தமிழ் படங்களில் நடித்து அசத்திய நடிகை கீர்த்தி சுரேஷ், கடைசியாக தளபதி விஜய்யின் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர், தற்போது அவர் நடிப்பில் வெளியாக உள்ள பெண்குயின் படத்தின் சீட் எட்ஜ் த்ரில்லர் டிரைலரை பார்த்த ரசிகர்கள் அவரது நடிப்பை வெகுவாக புகழ்ந்து பாராட்டி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தியேட்டர் ரிலீஸ்
கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாக உள்ள நிலையில், அவர் நடிப்பில் தியேட்டர் ரிலீசுக்காக மிஸ் இந்தியா, அண்ணாத்த, அரபிக் கடலின் சிங்கம் உள்ளிட்ட பல படங்கள் காத்துக் கிடக்கின்றன. பொன்மகள் வந்தாள் படத்திற்கு அமேசான் பிரைமில் கிடைக்காத வரவேற்பு பெண்குயின் படத்திற்கு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications