இந்தி தெரியாது போடா.. சொல்லி இருக்கவே மாட்டேன்.. கீர்த்தி சுரேஷ் சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கி கடும் நஷ்டத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால், அட்லீ கடும் மனஉளைச்சலில் இருப்பதைவிட, கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமான முதல் படமே இப்படி ஆகிவிட்டதே என்று குழம்பி உள்ளார். மேலும், இந்திக்கு போவேனு தெரிஞ்சியிருந்தா? இந்தி தெரியாது போடானு சொல்லி இருக்க மாட்டேன் என்று பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. பல வெற்றிப்படத்தை கொடுத்த, இவர் தமிழில் கடைசியாக பிகில் படத்தை 2019ம் ஆண்டு வெளியிட்டார்.

keerthy suresh raghuthatha interview

இப்படத்தின் வெற்றிக்கு பின், பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு ரூ.1000 கோடியை வாரிக்குவித்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீக்காக, பாலிவுட் நடிகர்கள் காத்து இருக்கின்றனர்.

நஷ்டத்தில் இயக்குநர்: ஆனால், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளராக மாறி, விஜய் நடித்த தெறி படத்தை பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார். இப்படத்தில், நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேபி ஜான் படம் கடந்த டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கியது. 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், வெறும் ரூ.60 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாககூறப்படுகிறது. இதனால் அட்லீக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

நடித்து இருக்கவே மாட்டேன்: நடிகை கீர்த்திக் சுரேஷ், பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் இருக்கிறார். மேலும், நான் இந்திக்கு போவேனு தெரிந்து இருந்தால், ரகு தாத்தா படத்தில் நடித்து இருக்கவே மாட்டேன். அந்த படத்தில் இந்தி திணிப்பை பற்றி நான் இந்தி தெரியாது போடா என்ற டீசர் வெளியான போது பலர் என்னை பாராட்டினார்கள், தமிழகத்தில் எனக்கு ஆதரவு இருந்தது. ஆனால், பாலிவுட் ரசிகர்கள் இப்போது தான் இந்தியில் அறிமுகமாகுகிறார்கள். அதற்குள் எங்க மொழியைபற்றி இப்படியா, பேசுவது என்று கமெண்ட் போட்டார்கள். ரகு தாதா படம் இந்தியை எதிர்க்கும் படம் இல்லை என்று நான் எப்படி அவர்களிடம் சொல்லி புரிய வைப்பது என்கிற குழப்பம் இருந்தது என்று கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X