அன்புடன் தங்க மீனாட்சி.. அண்ணாத்த ரஜினிக்கு தங்கை கீர்த்தி சுரேஷின் அன்பான பிறந்தநாள் வாழ்த்து!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும் இதே எனர்ஜியுடனும் வாழ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது "அன்புடன் தங்க மீனாட்சி" என போட்டு அசத்தலாக வாழ்த்தி உள்ளார்.

நடிப்பு சாம்ராஜ்யம்
சினிமாவில் நடிப்பதால் இப்படியொரு சாம்ராஜ்யத்தை உலகளவில் ஒரு மனிதரால் ஏற்படுத்த முடியுமா? என்கிற கேள்விக்கு சூப்பர் ஸ்டார் எக்ஸாம்பிளாக வாழ்ந்து காட்டி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 71வயதிலும் அண்ணாத்த.. அண்ணாத்த என ஆட்டம் போட்டும் ரவுடிகளை ஏரில் பறக்க விட்டு பஞ்ச் பேசியும் நடிக்க இவரால் மட்டும் தான் முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார். அடுத்த படத்துக்கு ரெடியாகியும் வருகிறார்.

பல பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் தொடங்கி ஏகப்பட்ட இந்திய சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், ராம்சரண், ஹரிஷ் கல்யாண் என ஏகப்பட்ட பிரபலங்கள் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சூப்பராக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அன்புடன் தங்க மீனாட்சி
தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் தங்கை தங்க மீனாட்சியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு வயது முதலே உங்கள் படங்களை பார்த்து ரசித்து வந்த நான் உங்களுடன் இணைந்து நடிக்கும் போது ஃபேன் கேர்ளாகவே இருந்த தருணங்கள் அற்புதமானவை. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரஜினிகாந்த் சார் 'அன்புடன் தங்க மீனாட்சி'! என அட்டகாசமாக வாழ்த்தி உள்ளார்.

ரஜினி ரசிகர்கள் நன்றி
நடிகை கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த பட கதாபாத்திரத்தை மறக்காமல் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொன்ன நிலையில், தலைவர் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். தென்னிந்திய நடிகைகளிலேயே அதிகளவில் ட்விட்டரில் பேசப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்துவரும் கீர்த்தி சுரேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











