Keerthy Suresh: யம்மாடியோவ்.. என்னவொரு போஸ்.. காலையிலேயே பசங்களை டெம்ப்ட் ஆக்கும் கீர்த்தி சுரேஷ்!
சென்னை: நடிகை நயன்தாராவை தொடர்ந்து அடுத்ததாக அட்லீ மூலமாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கப் போகும் நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் செம ஃபிட்டாக இருக்க கடினமாக ஒர்க்அவுட் செய்து வருகிறார்.
யோகாவில் அதிகம் நாட்டம் கொண்டவராக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது புஷ் அப் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்கள் உள்ளன.

நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ்: தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய தெறி திரைப்படம் இந்தியில் வருண் தவான் நடிப்பில் உருவாகி வருகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா காபி நடித்து வருகின்றனர்.
தமிழில் சமந்தா நடித்த டாக்டர் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் மைதான் திரைப்படத்தில் நடிக்கத் தேர்வான கீர்த்தி சுரேஷ் உடல் எடையை அதிக அளவில் குறைந்ததன் விளைவாக ஓடாக தேய்ந்து போனார். அதே காரணமா காட்டி கீர்த்தி சுரேஷ் அந்த படத்திலிருந்து தூக்கி விட்டனர். இந்நிலையில், அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
தமிழில் இத்தனை படங்கள்: தமிழில் இந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான சாணிக் காயிதம் படத்தின் பொன்னி கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள்.
மேலும், தமிழில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று காலை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புஷ் அப் செய்யும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

செம போஸ்: தாறுமாறு தலைவி என கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களை போட்டுத் தாக்கி வருகின்றனர். அடுத்தடுத்து பல படங்களை ரிலீஸ் செய்து தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்ய காத்திருக்கிறார். அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பல லட்சம் லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகின்றன. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 16.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











