கடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க!
சென்னை: இயக்குநர் செல்வராகவன் முதன் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள சாணிக் காயிதம் படத்திற்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது.
இந்த படத்தில் செல்வராகவன் உடன் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்.
படத்தின் பூஜையை முன்னிட்டு இருவரும் கை கூப்பி கும்பிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதன் முறையாக
துள்ளுவதோ இளமை படத்தில் கதாசிரியராக ஆரம்பித்த பயணம், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே என இயக்கத்தில் மிரட்டி வந்த செல்வராகவன், தற்போது முதன்முறையாக நடிகராக சாணிக் காயிதம் படத்தில் அதுவும் லீடு ரோலில் நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷும் இருக்காங்க
மோகன் லால் உடன் நடித்த அரபிக் கடலின் சிங்கம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பட்டா என கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவன் உடன் இணைந்து இந்த படத்தில் மிரட்ட உள்ளார்.

சுதா கொங்கரா பட்டறை
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று மிகப்பெரிய பாராட்டுக்களுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. சுதா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். 80களில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு சாணிக் காயிதம் உருவாகவுள்ளது.

குத்த வச்சு உட்கார்ந்து
சாணிக் காயிதம் படம் பற்றிய அறிமுக போஸ்டரில் செல்வராகவன் கையில் கத்தியும், கீர்த்தி சுரேஷ் கையில் துப்பாக்கியும் இருந்தன. அதே போல இன்னொரு போஸ்டரில், இருவரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டு, குத்த வச்சு உட்கார்ந்து இருப்பது போல இருக்கும் போஸ்டர் வெளியானது.

பூஜை போட்டாச்சு
இந்நிலையில், இந்த படத்துக்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ள புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கடவுளை வேண்டி எல்லாம் நல்ல படியாக முடிய வேண்டும் என்பது போல வேண்டும் அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

கடவுள் தான் காப்பாத்தணும்
மாஸ்க் அணிந்து கொண்டு படு சேஃப்டியாக இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. ஹைதராபாத், துபாய், சென்னை என பறந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் பூஜையின் போது கடவுளை வேண்டிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், கொரோனா பரவல் ஏதும் இல்லாமல் நல்ல படியாக இந்த தரமான சம்பவம் சீக்கிரம் உருவாகி தியேட்டருக்கு வரணும் என வேண்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











