கீர்த்தி சுரேஷின் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்…வெளியீட்டில் படக்குழு மும்முரம் !
சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், குறுகிய காலத்திலேயே திறமையான நடிகை என பெயர் எடுத்துவிட்டார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கு இளம் நடிகரான நிதினுடன் ரங் தே படத்தில் நடித்து வருகிறார்.
மார்ச் 26ந்தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு சென்சார் போர்டு யூ/ஏ வழங்கி உள்ளது.

கவனிக்கப்பட்டார்
இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், கீர்த்தி சுரேஷ் தமிழ் திரைத்துறையினராலும், ரசிகர்களாலும் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

தனுஷூக்கு ஜோடியாக
அதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான தொடரி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற போன உசுரு வந்துருச்சி என்ற பாடல் வெற்றி பெற்று அனைவரின் விருப்ப பாடலாக மாறி பட்டிதொட்டி எங்கும் கேட்டது.

தேசிய விருது
சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ, விஜய்யுடன் பைரவா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதன் முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார். மேலும், தென்னிந்திய சினிமா வரலாற்றில் தலை சிறந்த நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்தார். இப்படம் இவருக்கு தேசிய விருதைபெற்றுத்தந்தது.

யு/ஏ சான்றிதழ்
தமிழ்,தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் இவர், தெலுங்கு சினிமாவில் இளம் நடிகரான நிதினுடன் ரங் தே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் சிறந்த முறையில் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராங் தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











