Don't Miss!
- News
சத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி!
- Sports
வாட்சன் கிட்டயும் இப்படித்தான் நடந்தது.. தமிழக வீரருக்கு "நோ" சொன்ன தோனி? கொஞ்சம்கூட நியாயமே இல்லை!
- Lifestyle
வார ராசிபலன் 18.04.2021 முதல் 24.04.2021 வரை - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…
- Automobiles
7-இருக்கை ஜீப் காம்பஸ் மீண்டும் இந்தியாவில் சோதனை!! ஸ்பை படங்கள் வெளியீடு!
- Finance
15 நாள்ல 3000 ரூபாய் எகிறிய தங்கம்.. இன்னிக்குத் தங்கம் விலை என்ன தெரியுமா..?
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொஞ்சம் சதை போட்ட மாறி தெரியுதே.. பழைய பப்ளினஸ்க்கு மாறும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: பாலிவுட் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்புக்காக உடல் எடை குறைத்து ஓடாய் தேய்ந்து போன கீர்த்தி சுரேஷ், மீண்டும் பழைய பப்ளினஸ்க்கு மாறி வருகிறார்.
சம்மர் மூட் என தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்து வருகிறது.
ஸ்லீவ்லெஸ் சுடிதாரில்.. முஸ்லிம் கெட்டப்பில்..முரட்டுத்தனமாய் ரம்யா பாண்டியன்.. கதறும் நெட்டிசன்ஸ்!
இப்படித் தான் உங்களை பார்க்க ஆசைப் படுறோம் கீர்த்தி என ஏகப்பட்ட ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஓடாய் தேய்ந்தார்
நல்லா பப்ளியா இருந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் படத்தில் கிடைத்த வாய்ப்பு காரணமாக ஒல்லியாக உடல் மெலிந்து ஓடாய் தேய்ந்தார். ஆனால், கடைசியில் சில பல காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு கீர்த்திக்கு பதில் பிரியமாணி தேர்வானார்.

எல்லாம் வீணாய் போச்சு
கீர்த்தி சுரேஷ் பட்ட அத்தனை கஷ்டங்களும் கடைசியில் வீணாய் போனது. அதே ஒல்லி தோற்றத்துடன் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா உள்ளிட்ட படங்களும் ஒடிடியில் வெளியாகி வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. பழைய கீர்த்தி சுரேஷ் தான் வேண்டும் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

சதை போட்டாச்சு
இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சம்மர் மூட் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. கொஞ்சம் உடல் சதை போட்டு இருக்காரே கீர்த்தி, பழைய பப்ளினஸ் வந்துடுச்சே என ஏகப்பட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் கிளாமர் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

வளைச்சு வளைச்சு
மாடிப் படியில் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் வித விதமான போட்டோக்களை சும்மா வளைச்சு வளைச்சு போஸ் கொடுத்து தள்ளி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தலைவி மீண்டும் வந்துட்டாங்க, விட்ட இடத்தை பிடிக்கப் போறாங்கன்னு ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட்டில் வாயார வாழ்த்தி வருகின்றனர்.

மகேஷ் பாபு படத்தில்
மோகன் லால் படம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், சில முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக முன்பை போலவே கலக்க உள்ளார் என்றும் தெரிகிறது.

தளபதி 65 வாய்ப்பு
பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா என தளபதி 65 படத்தில் விஜய்க்கு யாரு ஜோடி ஆவார் என போட்டா போட்டி நடந்து வருகிறது. கீர்த்தி சுரேஷ் மறுபடியும் தனது க்யூட்டான தோற்றத்திற்கு மாறி வரும் நிலையில், மகேஷ் பாபு படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்.