இந்தி படம் பண்றேன்.. இந்தி திணிப்புக்கு எதிரா பண்றேன்.. ‘ரகு தாத்தா’ விழாவில் கீர்த்தி சுரேஷ் பதில்!

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படமும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது. ஏற்கனவே சியான் விக்ரமின் தங்கலான், பிரசாந்தின் அந்தகன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள நிலையில், கீர்த்தி சுரேஷும் தைரியமாக தனது படத்தை வெளியிடுகிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஹயாட் ரெசிடென்ஸியில் இன்று நடைபெற்றது.

மாலை 3 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7 மணிக்கு மேல் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் புரமோஷன் நிகழ்ச்சிகளால் வர தாமதமானது மன்னிக்க வேண்டும் என்றார்.

Keerthy Suresh Raghu Thatha Hindi

நிகழ்ச்சியில் அவர் பேசியதை கவனித்ததை விட இசை வெளியீட்டு விழாவுக்கு அவர் அணிந்து வந்த ஆடை தான் அனைவரது கண்களையும் கவர்ந்துள்ளன. அந்தளவுக்கு ஓவர் கவர்ச்சியாக உடையணிந்துக் கொண்டு செம மேக்கப்புடன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

ஓபன் முதுகு: நடிகை கீர்த்தி சுரேஷின் பின்பகுதி மொத்தமும் பளிச்சென தெரியும் விதமாக கவர்ச்சியான உடையை கச்சிதமாக அணிந்துக் கொண்டு ரகு தாத்தா நிகழ்ச்சிக்கு வந்து கோலிவுட் ரசிகர்களுக்கும் ஓரவஞ்சனை செய்யாமல் கவர்ச்சி தீனி போட்டுள்ளார். பாலிவுட்டில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அங்கே நிகழ்ச்சிகளுக்கு செல்வதை போலவே இங்கேயும் வந்து விட்டாரா என சோஷியல் மீடியாவில் ட்ரோல்களும் பறக்கின்றன.

Keerthy Suresh Raghu Thatha Hindi

இந்தி படம் - இந்தி திணிப்பு: ரகு தாத்தா திரைப்படத்தின் டீசரை பார்த்த போதே இது இந்தி திணிப்புக்கு எதிரான படம் என கண்டு பிடித்து விட்டீர்கள். எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும் டிசம்பர் மாதம் இந்தி படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார், ஆகஸ்ட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான படமா என, அதற்கான விளக்கத்தை கொடுக்கிறேன் என கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசி பலரது கைதட்டல்களை அள்ளினார். இந்த படத்தில் எந்தவொரு அரசியல் சர்ச்சையும் இருக்காது என்பதையும் உறுதியாக கூறுகிறேன். இது முழுக்க முழுக்க காமெடி படம் என்றார்.

Keerthy Suresh Raghu Thatha Hindi

பெண்களுக்கு எதிரான திணிப்பு: இந்த படம் இந்தி திணிப்புக்கு எதிரான படம் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான திணிப்புகளுக்கும் எதிரான படம். இந்த படத்தை ஆரம்பத்தில் எப்படி செய்யப் போகிறேன் என்கிற தயக்கம் இருந்தது. இயக்குநர் சுமன் குமார் தான் அந்த பிரச்சனையை எல்லாம் போக்கினார் என்றார் கீர்த்தி சுரேஷ். மேலும், சாணிக் காயிதம் படத்தை தொடர்ந்து பெண் ஒளிப்பதிவாளர் யாமினியுடன் இந்த படத்திலும் பணியாற்றியது ரொம்பவே மகிழ்ச்சியை அளிக்கிறது. பல பெண்கள் இந்த படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது படத்திற்கான உண்மையான பலம் என நம்புகிறேன் என்றார். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள அனைத்து பாடல்களும் தன்னுடைய ஃபேவரைட் என்றும் கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Keerthy Suresh Raghu Thatha Hindi

டிரெண்டிங்கில் கீர்த்தி சுரேஷ்: ரகு தாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா சற்று முன் நடைபெற்ற நிலையில், கீர்த்தி சுரேஷ் எக்ஸ் தளம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார். அவரது போட்டோக்களை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகி உள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகிறது. அதில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் அட்மினான ஜெகதீஷ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படமும் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X