சுதா கொங்கராவுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்?: கூட்டணி மட்டும் புதுசு இல்ல, தரமான சம்பவமும் இருக்கு
சென்னை: தமிழ் சினிமாவுலகின் முன்னணி இயக்குநராக வலம்வரும் சுதா கொங்கரா தற்போது இந்தி சூரரைப் போற்று சூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.
முன்னதாக அவர் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த 'சூரரைப் போற்று' படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியது.
சுதா கொங்கராவின் அடுத்த படம் குறித்தும், அதில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கராவின் போராட்டம்
தன்னை ஒரு பெண் இயக்குநர் என அடையாளப்படுத்திக் கொள்வதில் விருப்பம் இல்லாத சுதா கொங்கரா, 'இறுதிச் சுற்று' படம் மூலம் கவனம் பெற்றார். மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகியிருந்தது. இயக்குநராக வேண்டும் என்ற சுதா கொங்கராவிற்கு, இறுதிச் சுற்று படம் தான், தனி அடையாளத்தை கொடுத்தது.

சூர்யாவுடன் சூரரைப் போற்று
தொடர்ந்து சூர்யாவுடன் 'சூரரைப் போற்று' படத்தில் இணைந்தார் சுதா. இந்த முறை டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனர் கோபிநாத்தின் பயோபிக்காக உருவாகிய இந்தப் படம், நேரடியாக அமேசானில் வெளியானது. யாருமே எதிர்பார்க்காத வகையில் இமாலய வெற்றியடைந்த 'சூரரைப் போற்று', 5 தேசிய விருதுகளை வென்று பிரமிக்க வைத்தது.

மெகா கூட்டணிக்கு ரெடியான சுதா கொங்கரா
சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பால், இத்திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது. அக்சய் குமார் நடிப்பில் இந்தியிலும் சுதா இயக்கும் 'சூரரைப் போற்று', விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 'கேஜிஎஃப்' படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனத்துடன் இணைகிறார் சுதா கொங்கரா.
Recommended Video

கீர்த்தி சுரேஷுக்கு லீட் ரோல்
ஹோம்பலே நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா படம் இயக்கவுள்ளதாக, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்தப் படம் குறித்து எந்த அப்டேட்களும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இந்தப் படம் இருக்கும் என்பதால், படக்குழு கீர்த்தி சுரேஷை நடிக்கவைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், இந்தப் படம் நிச்சயமாக வேற லெவலில் இருக்கும் எனவும், படக்குழு தரப்பில் இருந்து நம்பிக்கையான அப்டேட் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











