சூப்பர் ஸ்டார் வாரிசுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?
திருவனந்தபுரம்: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மகனுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.
சர்கார் படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் எந்த தமிழ் படமும் இதுவரை ரிலீஸாகவில்லை. அவர் மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் செல்வதால் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக உள்ளார்.

ஒல்லிக்குச்சியாக இருக்கும் கீர்த்தியை பார்த்தால் சீக்கு கோழி மாதிரி உள்ளது என்று அவரின் ரசிகர்களே தெரிவித்துள்ளனர். அவர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மரக்கார்: அரபிகடலின்டே சிம்ஹம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கும் புதுப்படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. அந்த படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் தான் ஹீரோ. மரக்கார் படத்தில் பிரனவ் சிறு வயது மோகன்லாலாக நடித்துள்ளார். ஆனால் அவரும், கீர்த்தியும் எந்த காட்சியிலும் சேர்ந்து நடிக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளனர். வினித் ஸ்ரீனிவாசன் படங்களுக்கு மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உண்டு.
வினித் பிரனவ் மோகன்லாலை வைத்து எடுக்க உள்ள படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவங்குமாம். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதை அவரின் ரசிகர்கள் #4YearsOfKeerthySuresh என்ற ஹேஷ்டேகுடன் ட்விட்டரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 4 ஆண்டுகளில் அவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











