கீர்த்தி சுரேஷ் டு காஜல் அகர்வால்.. தங்க தளபதி விஜய்.. பர்த்டே காமன் டிபியை வெளியிட்ட பிரபலங்கள்!

சென்னை: தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் பெருந்தன்மையுடன் நடிகர் விஜய் சொன்னாலும், அவரது பிறந்தநாள் காமன் டிபியை பல முன்னணி நட்சத்திரங்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பிறந்த நடிகர் விஜய், தனது 46வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், லோகேஷ் கனகராஜ், மோகன் ராஜா, பூனம் பஜ்வா, சாந்தனு, தமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் தற்போடு பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

தங்க தளபதி விஜய்

தங்க தளபதி விஜய்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், தற்போதே பிறந்தநாள் காமன் டிபியை பல பிரபலங்களும் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு சென்றிருக்கிறது. பக்காவான டிசைனில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தளபதி விஜய் பெயர் சிம்மாசனத்தில் ஸ்டைலாக விஜய் அமர்ந்திருக்கும் சிடிபி ரசிகர்கள் நெஞ்சங்களை அள்ளுகிறது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

நடிகர் விஜய்யின் துப்பாக்கி, ஜில்லா படங்களில் ஜோடி போட்டு நடித்து அசத்திய நடிகை காஜல் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபியை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், ஹேப்பி பர்த்டே விஜய், உங்கள் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் டிபி செம சூப்பர் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் தமன்

இசையமைப்பாளர் தமன்

தளபதி 65 படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ள தமன் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தளபதி விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபியை ரிலீஸ் செய்துள்ளார். இந்த டிசைனை வடிவமைத்த ஷைனு மாஷுக்கு பாராட்டு தெரிவித்த தமன், அண்ணன் விஜய்யின் பிறந்தநாள் டிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

அருண் ராஜா காமராஜ்

அருண் ராஜா காமராஜ்

கனா படத்தின் இயக்குநரும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகருமான அருண் ராஜா காமராஜ், இதய தளபதியின் பிறந்தநாள் டிபியை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார். விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பைரவா படத்தில் "வரலாம் வரலாம் வா பைரவா" பாட்டை பாடியது இவர் தான் என்பது அனைத்து ரசிகர்களும் அறிந்தது தான். மாஸ்டர் படத்திலும் குட்டி ஸ்டோரியின் வரிகளுக்கு சொந்தக்காரரும் இவர் தான்.

வேலாயுதம் இயக்குநர்

வேலாயுதம் இயக்குநர்

ஜெயம் ரவியின் அண்ணனும் தனி ஒருவன், வேலாயுதம், வேலைக்காரன் படங்களின் இயக்குநருமான மோகன் ராஜாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் காமன் டிபியை ரசிகர்களின் கோரிக்கைக்கு இணங்கி வெளியிட்டு இருக்கிறார். சீக்கிரமே இவர்கள் காம்போவில் இன்னொரு படம் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷும்

கீர்த்தி சுரேஷும்

நடிகர் விஜய்யின் பைரவா மற்றும் சர்கார் படங்களில் ஜோடியாக நடித்து கலக்கிய நடிகை கீர்த்தி சுரேஷும் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த காமன் டிபியை வெளியிட்டு விஜய் ரசிகர்களை வேற லெவலில் உற்சாகமடைய வைத்துள்ளார். லவ் தி டிசைன் என ஷைனு மாஷுக்கும் சூப்பரான நன்றியை கூறியுள்ளார்.

வரலக்‌ஷ்மி சரத்குமார்

வரலக்‌ஷ்மி சரத்குமார்

சர்கார் பட ஹீரோயின் வெளியிட்டால், வில்லி வரலக்‌ஷ்மி மட்டும் சும்மா இருப்பாரா அவரும் இதய தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமான கொண்டாட்டத்தை உற்சாகத்துடன் தனது டிவீட்டில் கொண்டாடி இந்த அட்டகாசமான டிசைனுடன் இருக்கும் பிறந்தநாள் டிபியை வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X