மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்!

சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ்

தனது அப்பா சுரேஷ் குமாரின் தயாரிப்பில் சொந்த பேனரின் கீழ் வஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சர்வதேச விருதுகளை

சர்வதேச விருதுகளை

தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் சர்வதேச அளவில் பல விருதுகளை வாங்கி குவித்தது அதைத் தொடர்ந்து தனுஷ் ஹீரோவாக நடித்த கர்ணன் என்ற படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி அந்த படமும் வெற்றிபெற்று பல பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றிருக்கிறது இந்த நிலையில் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் இந்த படம் கபடி விளையாட்டை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகிறது

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

முன்னணி நாயகர்களும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சூழலில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் கை கோர்க்கிறார். உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் கலகலப்பான காமெடி படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்தவர். இப்பொழுது சமூகத்திற்கு தேவையான சமூக அக்கறை கொண்ட படங்கள் மீது ஆர்வம் கொண்டு அதுபோன்ற படங்களில் நடிப்பதிலும் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இப்போது கனா இயக்குனர் அருண்ராஜ் காமராஜா இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிகள் 15 படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக நெஞ்சுக்கு நீதி உருவாகி வருகிறது.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில் அடுத்ததாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இணைய உள்ளார். அடுத்த வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இதில் ஏற்கனவே பகத் பாசில் மற்றும் நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்

கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து அதிலும் வெற்றி பெற்று வருகிறார். அந்த வகையில் வஷி, குட்லக் சகி உள்ளிட்ட திரைப்படங்கள் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X