Keerthy Suresh: உதயநிதியுடன் புல்லட்டில் ரவுண்ட் அடித்த கீர்த்தி சுரேஷ்... பத்துப் பொருத்தமும் பக்கா
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படம் மூலம் முதன்முறையாக உதயநிதி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து உதயநிதி, கீர்த்தி சுரேஷ் இருவரும் ஜோடியாக வலம் வரும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
உதயநிதியுடன் ரவுண்ட் அடிக்கும் கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் விஜய், சூர்யா, விக்ரம், மகேஷ் பாபு, நானி உட்பட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் அடுத்த மாதம் வெளியாகிறது. உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில் இருவரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். முக்கியமாக வடிவேலுவின் கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து வடிவேலு, உதயநிதி இருவரும் ஒன்றாக இருக்கும் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதனைத் தொடர்ந்து வடிவேலு குரலில் ராசா கண்ணு பாடலும், ஏஆர் ரஹ்மான் பாடிய ஜிகு ஜிகு ரெயில் பாடலும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. அதன் தொடர்ச்சியாக உதயநிதி - கீர்த்தி சுரேஷின் க்யூட் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில், உதயநிதியும் கீர்த்தி சுரேஷும் புல்லட்டில் ஹாயாக ரவுண்ட் அடிக்கின்றனர். செம்ம ஸ்டைலிஷான இந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் பத்துப் பொருத்தமும் பக்காவாக செட்டாகியுள்ளதே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மாமன்னன் திரைப்படத்தில் இருந்து இதுவரை வடிவேலு போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், இப்போது உதயநிதி - கீர்த்தி சுரேஷ் ஜோடி ரசிகர்களுக்கு ஜில் அப்டேட் கொடுத்துள்ளது.
இதனிடயே ஏஆர் ரஹ்மான் இசையில் அவரே பாடியிருந்த மாமன்னன் செகண்ட் சிங்கிள், நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்தப் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. அதில், நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே உதயநிதி - கீர்த்தி சுரேஷ் போஸ்டர் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











