Baby John: இந்திக்கு போனதும் கிளாமர் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. பேபி ஜான் படத்துக்காக தாராளம்!

மும்பை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை என்றாலும் மலையாளத்தை விடவும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மலையாளத்திலும் கவனிக்கத்தகுந்த படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றும் வருகின்றார். 32 வயதான கீர்த்தி சுரேஷ் விரைவில், அதாவது வரும் டிசம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தனது காதலரைக் கரம் பிடிக்கின்றார், அதாவது திருமணம் செய்யவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் பாடல் வரும் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கீர்த்தி சுரேஷ் செம கிளாமராக காட்சி அளிக்கின்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். அதேநேரத்தில் தொடர்ந்து மசாலா படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்தும் வருகின்றார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி செண்ட்ரிக் படங்களில் நடிக்கத் தொடங்கினார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படத்திற்கு தியேட்டரில் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும், ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் கிருஸ்துமஸ்க்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளாதக கூறப்படுகின்றது.

keerthy suresh varun dhawan baby john

பேபி ஜான் படத்தினைப் பொறுத்தவரை அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமாகும். இந்தப் படத்தினை இந்தியில் அட்லீ தயாரிக்கின்றார். பேபி ஜான் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நேரடியாக இந்தியில் அறிமுகமாகின்றார்.

முதல் பாடல்: இந்தப் படத்தில் சிறப்பாக நடித்தது மட்டும் இல்லாமல், பாடல் காட்சிகள் தென்னிந்திய சினிமாவைவிட கொஞ்சம் தூக்கலான கிளாமரில் நடித்துள்ளார் போலத் தெரிகின்றது. வரும் 25ஆம் தேதி பேபி ஜான் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற அறிவிப்பு படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் நடித்ததைவிடவும் செம கிளாமராகத் தெரிகின்றார்.

keerthy suresh varun dhawan baby john

கிளாமர் கீர்த்தி: கிளாமராக நடித்தால்தான் இந்தி உலகில் கொஞ்சம் காலமாவது நீடிக்க முடியும் என அவர் யோசித்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனாலும் அம்மணி அந்தக் கவர்ச்சியை இங்கே காட்டவில்லையே என ரசிகர்கள் கோபித்தும் கொண்டுள்ளனர். இதுமட்டும் இல்லாமல், கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதால், இதன் பின்னர் படங்களில் நடிப்பாரா மாட்டாரா எனத் தெரியவில்லை. எனவே ரசிகர்களுக்காக கிளாமராக நடித்திருக்கலாம் எனவும் சிலர் பேசிக்கொள்கின்றார்கள்.

keerthy suresh varun dhawan baby john

படக்குழு: பேபி ஜான் படத்தினைப் பொறுத்தவரையில் வருண் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தினை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும், வாமிகா கேபி நடித்துள்ளனர். படத்தினை காளிஸ் இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக ப்ரியா அட்லீ பணிபுரிந்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

keerthy suresh varun dhawan baby john

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X