Keerthy Suresh Wedding: காதலரை மணந்தார் கீர்த்தி சுரேஷ்.. ஒரே சிரிப்புதான் போங்க.. சும்மா அள்ளுதே!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனியை இன்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி கரம் பிடித்தார். இவரது திருமணம் கோவாவில் நடைபெற்றது. இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பிரபலங்கள், இந்தித் திரைப்பிரபலங்கள் என பலர் இவர்களின் திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டார்கிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மொத்தம் 8 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் தாலி கட்டும்போதும், தாலி கட்டிய பின் மற்றும் தாலி கட்டும் முன் என மண மேடையில் எடுத்த புகைப்படங்கள் மட்டும் மொத்தம் 6 புகைப்படங்கள் ஆகும். இதுமட்டும் இல்லாமல், தனது செல்லப்பிரானியுடனும் ஒரு புகைப்படம் எடுத்து அதனையும் பகிர்ந்துள்ளார்.

தாலி கட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக சிரித்தபடி, தனது காதலர் ஆண்டனியைப் பார்க்கும் கீர்த்தி சுரேஷ், தாலி கட்டி முடித்த பின்னர், அண்டனியை உடனே கட்டிப்பிடித்துக் கொண்டார். ஆண்டனியும் கீர்த்தி சுரேஷ் உச்சந்தலையில் முத்தம் வைத்தார். இந்தப் புகைப்படங்கள் மிகவும் அழககாவும் அதேநேரத்தில் செம ரொமாண்டிக்காகவும் உள்ளது.
சினிமா லைஃப்: கீர்த்தி சுரேஷைப் பொறுத்தவரையில் கோலிவுட்டில் தனது திரை வாழ்க்கையை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக தொடங்கினார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் இவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தததால் பட்டி தொட்டி எங்கும் போய்ச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

தேசிய விருது: தெலுங்கிலும் கவனம் பெறும் நடிகையாக மாறினார். குறிப்பாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி (தெலுங்கு) தமிழில் நடிகையர் திலகம் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் கட்டிப்போட்டது என்றுதான் கூறப்வேண்டும். பயோ பிக் படத்தில் அதுவும், தனது இருக்கும் சினிமா படங்களின் ரெபரன்ஸ் காட்சிகள் மூலம் கதாபாத்திரத்தினை உள்வாங்கிக் கொண்டு அவர் நடித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தப் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் அவரைத் தேடி வந்தது. கடைசியாக நேரடியாக தெலுங்கில் ரிலீஸ் ஆன தசாரா படத்தில் இவரது அசாத்திய நடிப்பு இவருக்கு சைமா விருதினைப் பெற்றுத்தந்தது.

பேபி ஜான்: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரகு தாத்தா. இந்தப் படத்திற்கு தியேட்டரில் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும், ஓடிடி தளத்தில் 150 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் ஆன படமாக சாதனை படைத்துள்ளது. அடுத்து கீர்த்தி சுரேஷ் இந்தியில் பேபி ஜான் என்ற படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படம் தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இப்படியான நிலையில் காதலரைக் கரம்பிடித்துள்ள இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











