ஒரு கையில் கன்.. மறு கையில் தம்.. சாணிக் காயிதம் போஸ்டரை போட்டு செல்வாவை வாழ்த்திய கீர்த்தி!

சென்னை: இயக்குநர் செல்வராகவனின் 44வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

செல்வராகவன் உடன் இணைந்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், சாணிக் காயிதம் படத்தின் மிரட்டலான புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் ஜீனியஸ் இயக்குநரையும் ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

படப்பிடிப்பு ஆரம்பம்

படப்பிடிப்பு ஆரம்பம்

இயக்குநராக தமிழ் சினிமாவை கலக்கி வந்த செல்வராகவன் முதன்முறையாக நடிகராக கலக்க உள்ளார். இயக்குநர் அருண் மாதவன் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிக்கும் புதிய படமான சாணிக் காயிதம் படத்திற்கு சமீபத்தில் பூஜை போட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது.

44வது பிறந்தநாள்

44வது பிறந்தநாள்

1977ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இயக்குநர் கஸ்தூரி ராஜா - விஜயலக்‌ஷ்மி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் செல்வராகவன். சினிமாவை விட்டே கடன் தொல்லையால் விலகும் முடிவில் அப்பா கஸ்தூரி ராஜா இருந்த போது, இவர் எழுதிய துள்ளுவதோ இளமை கதையை படமாக்கி தம்பி தனுஷை நடிகராக அறிமுகம் செய்து அப்பாவுக்கும் தம்பிக்கும் ஏணியாய் இருந்தவர் செல்வராகவன்.

ஒரு கையில் தம் மறு கையில் கன்

ஒரு கையில் தம் மறு கையில் கன்

இயக்குநர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சாணிக் காயிதம் படத்தின் புதிய போஸ்டரும் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி மிரட்டி வருகிறது. ஒரு கையில் தம் மற்றும் மறு கையில் கன் அருகில் ஒருவர் கட்டிப் போட்டு ரத்தவெள்ளத்தில் கிடக்க பயங்கரமாக இருக்கிறது இந்த போஸ்டர்.

பார்ட்னர் இன் கிரைம்

பார்ட்னர் இன் கிரைம்

சாணிக் காயிதம் படத்தில் செல்வராகவன் உடன் இணைந்து நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பார்ட்னர் இன் கிரைமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ட்வீட் செய்து அந்த புதிய போஸ்டரையும் ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார். இருவரும் இணைந்து ரசிகர்களுக்கு கூடிய சீக்கிரமே ஒரு தரமான சம்பவத்தை திரையில் காட்ட உள்ளனர்.

டபுள் ட்ரீட்

டபுள் ட்ரீட்

நீண்ட காலமாக வெளியாகமல் இருந்த செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் பல தடைகளுக்கு பிறகு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தன்னுடைய பிறந்தநாளிலேயே இந்த படம் வெளியாகி உள்ள நிலையில், செல்வராகவன் சந்தோஷாத்தில் உள்ளார். ரசிகர்களுக்கு இன்று டபுள் ட்ரீட் என்றே சொல்லலாம்.

செல்வா ரிட்டர்ன்ஸ்

செல்வா ரிட்டர்ன்ஸ்

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு வரவேற்பு குவிந்து வரும் நிலையில், அடுத்ததாக சாணிக் காயிதம், தம்பி தனுஷ் உடன் இணைந்து நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என செல்வராகவன் மீண்டும் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க உள்ளார். புதுப்பேட்டை 2 படத்திற்கும் தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X