Youth: ஆல் இந்தியா கென் ரசிகர்கள்.. தியேட்டர் வாசலிலேயே கலாய்த்து விட்ட நண்பர்கள்

சென்னை: நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கி உள்ள படம் யூத். படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர் சாந்தனு போன்றவர்கள், படம் நன்றாக உள்ளது, எனக்கு உங்களைத் தெரியாது, ஆனாலும் உங்களது இந்த வெற்றிக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் ரசிகர்கள் சிலர் கென் கருணாஸ்க்கு தியேட்டர் வாசலிலேயே மாலை அணிவித்து, சால்வை அணிவித்து, கையில் வேல் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கென் கருணாஸ், யூத் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே மிகவும் ஜனரஞ்சகமாக யோசித்து யோசித்து எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்தது என்றே சொல்லலாம். மேலும் படத்தில் இடம்பெற்ற பாடலான முட்டை கலக்கி பாடல் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது.

படம் பார்த்த பலரும், ஒரு முறை பார்க்க ஏதுவான படம் என்றும், படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தா படம் பிரமாதமாகவே வந்திருக்கும் என்றும் தெரிவித்தனர். ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்கள் பலரும் அதை தெரிவித்தனர். படம் பார்த்த ரசிகர்களும் பல காட்சிகளில் சிரித்தது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

மேலும் கென் கருணாஸின் தந்தையும் நடிகருமான கருணாஸ் படத்தின் முதல் காட்சி முடிந்த பின்னர், கென் கருணாஸைக் கட்டிப் பிடித்து, வாழ்த்துகள் மை டியர் சன், படம் வெற்றி என்று தெரிவித்த வீடியோக்களும், ரசிகர்கள் பலரும் பாராட்டியதால் தியேட்டரிலேயே கென் கருணாஸ் எமோஷனல் ஆனதையும் பார்க்க முடிந்தது. இப்படி இருக்கும்போது, தியேட்டர் வாசலில் ரசிகர்கள் சிலர் கென் கருணாஸை பாராட்டவும் ஊக்குவிக்கும் விதமாகவும் கென் கருணாஸ்க்கு மாலை அணிவித்து, சால்வை அணிவித்து, கையில் வேல் ஒன்றைக் கொடுத்தனர்.

Ken Karunas Gets Grand Welcome Friends Troll All India Fan Club Moment

கலாய்த்த நண்பர்கள்: முதலில் தனக்கு மாலை போட வருகிறார்கள் என்று அறிந்ததும் கென் கருணாஸ் அதை வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்தனர். அதேபோல் சால்வையையும் மறுத்தார். மேலும் வேல் கொடுக்கிறார்கள் என்றதும் இதுவுமா, ரைட்டு என்று சிரித்துக் கொண்டே கூறினார். ரசிகர்கள் சிலர் இது போல செய்ய, இதைப் பார்த்த கென் கருணாஸின் நண்பர்கள் சிலர், ஆல் இந்தியா கென் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என்று கலாய்த்தனர். இதற்கு கென் கருணாஸோ, கையை நீட்டி விளையாட்டாக மிரட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Ken Karunas Gets Grand Welcome Friends Troll All India Fan Club Moment

வசூல்: படம் முதல் நாளில் ரூபாய் 3.20 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் படம் இந்த வார இறுதிக்குள் நல்ல வசூலை எட்டிவிடும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X