Ken Karunas: கண்ணு முன்னாடி வந்தா தொலைச்சுடுவேன்.. தெலுங்கு இயக்குநரிடம் வாங்கி கட்டிய கென்
சென்னை: நடிகர் கென் கருணாஸ் எழுதி இயக்கிய படம் யூத். படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளது. ஒரு இயக்குநராக நடிகராகவும் வெற்றி பெற்றுவிட்டார். இப்படி இருக்கையில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றபோது, கென் பகிர்ந்து கொண்ட தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
கென் கதாநாயகனாக நடித்த படம் என்றால் அது யூத் படம் தான். ஆனால் அதற்கு முன்னர் அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் கென் நடித்த தெலுங்கு படம், நடிகர் தனுஷ் நடித்து வெங்கி அட்லூரி இயக்கிய படமான வாத்தி படம். இந்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் நடித்த போது ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது ஒரு காட்சி நடிக்கும் போது, இயக்குநர் வெங்கி அட்லூரி என்னை அழைத்தார். நானும் போனேன், உடனே கென் இந்த காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்றால் என்று சொல்லிவிட்டு எதுவுமே சொல்லாமல், போய் சீன் பேப்பரைப் படி, அதன் பின்னர் நடி என்றார். நானும் சீன் பேப்பரை படித்துவிட்டு நடித்தேன். உடனே கென், இப்படி இல்லைடா, இங்க வா என்று சொல்லி மீண்டும் எதுவும் சொல்லாமல் என்னை போய் நடிக்கச் சொன்னார்.
வெங்கி அட்லூரி: நான் கொஞ்சம் மாற்றி நடித்தேன். உடனே சூப்பர்டா கென், நல்ல நடிச்ச, நன்றி என்று கூறினார். ஒரு நாள் போன் செய்து டேய், கென் என்னடா பண்ணி தொலைச்சிருக்க, உன்னால 20 லட்சம் ரூபாய் வேஸ்ட் டா, டேய் நீ இடது காலில் அடிபட்ட மாதிரி நடிக்க வேண்டிய காட்சியில் வலது காலில் அடிப்பட்ட மாதிரி நடிச்சிருக்க. முட்டாள், இனிமேல் என் கண்ணு முன்னாடி வந்துடாதடா தொலைச்சுவேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.

காப்பாற்றிய எடிட்டர்: எனக்கு பயம் ஏற்பட்டு விட்டது, என்ன செய்வது என்று தெரியாமல் எடிட்டிங் டீமில் இருந்த ஒருவரை நான் தொடர்பு கொண்டு, காலில் விழாத குறையாக , என்னுடைய அந்த காட்சியில் மட்டும் எனக்கு இடுப்புக்கு கீழ் காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் அதேபோல் செய்ததால், வெங்கி அட்லூரி சாரும் எனக்கு போன் செய்து திட்டியதற்கு மன்னிப்பு கேட்டார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், கென்னுக்கு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதா என்றும் ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications