Youth: கல்லா கட்டும் கருணாஸ் மகன்.. நின்னு விளையாடும் யூத்.. இதுதான் இமாலய வெற்றி!

சென்னை: இயக்குநராக அறிமுகம் ஆனது மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் இணை தயாரிப்பாளராகவும் யூத் படத்தில் பிரமாண்ட வெற்றியை படைத்துள்ளார் கென் கருணாஸ். பல படங்களில் குழந்தை நட்சத்திரம், அசுரன் படத்திற்கு பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்கள் என நடித்துக் கொண்டிருந்த கென் கருணாஸ், நான் நடிகர் மட்டுமல்ல என்னிடத்தில் இன்னொரு திறமையும் இருக்கிறது என்று உலகிற்கு காட்டியதுதான் இயக்குநர் அவதாரம். இந்த படத்தின் கதை, திரைக்கதை இயக்கம் என கென் கருணாஸ் மற்றும் அவரது டீமும் இணைந்து செய்திருந்தாலும், கென் கருணாஸ் அதை முன் நின்று வழிநடத்தி வெற்றியையும் ஈட்டி உள்ளார். படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

நடிகரும் பாடகருமான கருணாஸ், பாடகி கிரேஸ் கருணாஸ் தம்பதியரின் மகன் கென். தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் குழந்தை நட்சத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஈர்த்தவர். " சும்மா எல்லாம் சொல்லக் கூடாதுப்பா, வெற்றி மாறன் மாதிரி ஒரு இயக்குநர் ஒரு பையனை அவரோட படத்துல நடிக்க வைக்கிறார் என்றால் சும்மாவா? சிபாரிசு எல்லாம் வெற்றி மாறனிடம் எடுபடாது" என்று பலரும் சொன்னதை போலவே, அசுரன் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தை அசத்தலான நடிப்பால் ரசிகர்களை மிரட்டி விட்டார் கென்.

Ken Karunas s Youth Emerges a Blockbuster Crosses 68 Crore Worldwide
Photo Credit:

வெற்றிமாறன், தனுஷ் போன்ற திரையுலக ஜாம்பவன்களுடன் கென் கருணாஸுக்கு கிடைத்த அறிமுகம் சினிமா குறித்த அவரது பார்வை விசாலமடைய பெரும் உதவி செய்தது. மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவான திருச்சிற்றம்பலம் மற்றும் ராயன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

வரவேற்பு: இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் வெளியானது. படத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகவே கென் கருணாஸ் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார். பல பேட்டிகள் மிகவும் ஜாலியாக இருந்தாலும், நுட்பமான கேள்விகளுக்கு கென் கருணாஸ் கொடுத்த விரிவான பதில்கள் யாரும் எதிர்பார்க்காதது.

வசூல் வெற்றி: யூத் படம் வெளியாகி ரசிகர்கள் பலர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டினர். தமிழில் மார்ச் 19ஆம் தேதி ரிலீஸ் ஆனாலும், தெலுங்கில் மார்ச் மாதம் 27ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது போல தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் படம் இதுவரை ரூபாய் 68.2 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X