வெற்றிமாறன் சாக சொன்னாலும் செத்துரு.. கென்னுக்கு கண்டிஷன் போட்ட கருணாஸ்.. ஏன் தெரியுமா?

Recommended Video

Asuran | Karunas Son 'Ken' interview | தனுஷ் சார் என்ன பாத்து மெரண்டுட்டார்

சென்னை: அசுரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அடையாளம் பெற்று இருக்கும் கருணாஸ் மகன் கென் கருணாஸ் தனது அப்பா குறித்து பேட்டி அழைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கும் அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பலத்த வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரமான சிதம்பரம் என்ற பாத்திரத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடித்து உள்ளார்.

இவர் படத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அசுரன் திரைப்படத்தில் கென் கருணாஸ் சந்தித்த பல சுவாரசிய விஷயங்கள் இப்பொழுது வெளியாகியுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நாய் பயம்

நாய் பயம்

கென் கருணாஸிற்கு பொதுவாக நாய் என்றால் ரொம்ப பயமாம். ஆனால் அசுரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அவர் ஓரமாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அருகில் கட்டி போட்டு இருந்த நாய் எழும்பி வரவே டைரக்டர் வெற்றி மாறன் கென் கருணாஸிடன் நாய்க்கு ஒரு வாய் ஊட்டி விடுமாறு சொல்லியுள்ளார்.

செம பாராட்டு

செம பாராட்டு

இதை கேட்ட கென் கருணாஸும் தன் பயத்தை மறந்து தன் தட்டில் இருந்த சோற்றை நாய்க்கு ஊட்டியுள்ளார். ஊட்டி விட்ட மறுநொடியே அப்படியே நீ எடுத்து சாப்பிடு என்று சொல்லியுள்ளார். இதை கேட்ட கென் கருணாஸ் அதே அப்படியே செய்ய மொத்த யூனிட்டுமே அவரை பாராட்டியதாம்.

கத்திரி வெயில்

கத்திரி வெயில்

தன் நிஜ வாழ்க்கையில் பெரிதும் கஷ்டத்தை உணராத கென் கருணாஸ் இந்த படத்தில் நிறைய கஷ்டப்பட்டுள்ளாராம். இந்த படத்தில் சுட்டரிக்கும் கத்திரி வெயிலில் செருப்பு இல்லாமல் நடந்து சில சண்டை காட்சிகளில் மண்ணில் புரண்டு நடித்து உள்ளாராம். ஒரு காட்சியில் வில்லனிடம் உண்மையிலே அடி வாங்கி தன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

அப்பா சொன்ன அட்வைஸ்

அப்பா சொன்ன அட்வைஸ்

அவரின் அப்பாவான கருணாஸ் படப்பிடிப்பிற்கு முன்னால் கென்னிடம் நிறைய அறிவுரை கூறியுள்ளார். கென்னிடம் சென்று "டைரக்டர் வெற்றி மாறன் சொன்னா எது வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார். மேலும் அவர் வெற்றி மாறன் சாக சொன்னாலும் செத்துரு. பிறகு மத்ததை பார்த்துக்கலாம் என்று கென்க்கு கண்டிஷன் போட்டுள்ளார்.

தனுஷ் பீல் பண்ணாரு

தனுஷ் பீல் பண்ணாரு

இந்த படத்தில் ஒரு காட்சியில் கென் கருணாஸ் தன் ரீல் அப்பாவான தனுஷை மதிக்காமல் திட்ட வேண்டும். அந்த காட்சியில் நடித்த பின் தனுஷ் கென் கருணாஸை பெரிதும் பாராட்டியதாக சொல்ல படுகிறது. மேலும் அந்த குறிப்பிட்ட காட்சி முடிந்த பிறகும் தனுஷ் அவரிடம் வந்து சூப்பர்பா நீ நடிச்சது என்ன ரொம்ப பாராட்டி இருக்கிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கருணாஸுஸ்க்கு வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பம் கொடுத்த படம் வெற்றிமாறன் எடுத்த பொல்லாதவன். படம் முழுக்க அவரின் பாத்திரம் பேசப்பட்டது. இப்போது அவரின் பாத்திரம், நகைச்சுவை எல்லாம் வைரல். அதனால் அவர் வெற்றிமாறன் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X