Youth: புதிய சாதனையை படைத்த ‘முட்ட கலக்கி’ பாடல்.. கென் கருணாஸ் காட்டுல செம மழைதான்!
சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்த 'யூத்' திரைப்படம் அதிகபட்சமாக 82 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவே வெளியிட்டனர். இந்த ஆண்டு வெளியான படங்களில் பராசக்தி, தாய் கிழவி படங்களை தொடர்ந்து அதிக வசூலை 'யூத்' படம் அள்ளியது.
பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமே 60 கோடி அளவுக்குத்தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான 'முட்ட கலக்கி' பாடல் இதுவரை அதிக வியூஸ்களை அள்ளி அசத்தியுள்ளதாகவும் புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
125 மில்லியன் சாதனை: அதிவேகமாக 100 மில்லியன் வியூஸை கடந்த யூத் படத்தின் 'முட்ட கலக்கி' பாடல் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 125 மில்லியன் வியூஸை தற்போது கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் கென் கருணாஸ் எழுதி பாடிய இந்த பாடல் ஏகப்பட்ட சிறுவர் சிறுமிகள் முதற்கொண்டு இளைஞர்களையும் இளம் பெண்களையும் வெகுவாக கவர்ந்ததன் விளைவே இப்படியொரு சாதனையை 2 மாதங்களில் எட்ட முடிந்துள்ளது.
கலக்கும் கென்: கருணாஸ் காமெடியனாக நடித்து வந்தார். அதன் பின்னர் திண்டுக்கல் சாரதி படத்தில் ஹீரோவாக நடித்தார். அவருக்கு முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தாலும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து அவர் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளைபுரம் உள்ளிட்ட படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனால், கென் கருணாஸ் வெற்றிமாறன், தனுஷிடம் நன்கு பயிற்சி பெற்ற பின்னர், இயக்குநராகவும் ஹீரோவாகவும் அறிமுகமான முதல் படத்திலேயே 82 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை படைத்து கலக்கி உள்ளார்.
யூத் 2 வருமா?: யூத் படத்தை போலவே யூத் 2 படம் வருமா என ரசிகர்கள் இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், இப்போதைக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ராஜன் வகையறா படத்தில் தான் கென் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே அவர் இயக்கி நடிக்கும் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications