Youth Box Office: கென் கருணாஸ் ஜெயிச்சுட்டாரு மாறா.. நான்கே நாளில் பட்டையைக் கிளப்பிய யூத் வசூல்~
சென்னை: நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள படம் யூத். படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படம் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் முதல் பாதியில் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது என்று கூறினார்கள். இப்படி இருக்கையில் படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. இப்படி இருக்கும்போது படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 28.3 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான மகிழ்ச்சியை படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.
யூத் என்ற பெயரில் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் டைட்டிலை தனது படத்திற்கு கென் கருணாஸ் பயன்படுத்தி உள்ளார். ஆனாலும், படத்தில் அவர் தீவிரமான சிம்பு ரசிகராகவே நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பளம் வாங்கவே இல்லை என்றும், பணமே வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கென் கருணாஸின் தந்தை கருணாஸ் தெரிவித்தார்.

படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, வேதவர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ள்னர். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி பதிவிட்டனர் மேலும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க நகைச்சுவையாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், படம் முடியும் போது திருப்திகரமாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர். அதேபோல் பள்ளிக் காலத்தில் காதலித்த அனைவருக்கும் இந்த படம் ரொம்பவும் கனெக்ட் ஆகும் என்று தெரிவித்தனர்.
படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே அதிகம் கிடைத்ததால், வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அதாவது முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாள் வசூல் அதிகரித்தது. இது தொடர்ந்து முதல் நான்கு நாட்களுக்கு இருந்துள்ளது. மொத்ததில் படம் முதல் நான்கு நாட்களில் 28.3 கோடிகளை வசூலித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











