Vijay Son: இயக்குனராக அசத்திய கருணாஸ் மகன் கென்.. சிக்ஸர் அடிப்பாரா ‘சிக்மா’ இயக்குனர் ஜேசன் சஞ்சய்?

சென்னை: துரந்தர் 2 அளவுக்கு எல்லாம் கோலிவுட்டில் இப்போதைக்கு படம் வர வாய்ப்பே இல்லை என ஒரு பக்கம் ட்ரோல்கள் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், சின்ன படம் எடுத்து வெற்றிக் கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் தான் கோலிவுட்டின் நிலைமை தற்போது உள்ளது என்கின்றனர்.

பெரிய ஹீரோக்களும், இயக்குநர்களுமே சீரியஸான படங்களையோ பிரம்மாண்ட படங்களையோ நம்பி செல்லாமல் லைட் ஹார்ட்டட் கதைகளையும் காமெடி காட்சிகள் நிறைந்த படங்களையும் உருவாக்கி வருகின்றனர்.

Ken Karunas Youth movie turned Blockbuster Now all eyes focus on Vijay s Son Jason Sanjay s Sigma

அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அசத்திய நிலையில், லேட்டஸ்ட்டாக கருணாஸ் மகன் கென் அந்த சாதனையை செய்து மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில், தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் 'சிக்மா' படம் எப்போது வெளியாகும் என்றும் அந்த படம் வெற்றி சிக்ஸரை விளாசுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்.

கோலிவுட்டில் அடுத்த வாரிசு: ஷங்கர் மகள் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்த நிலையில், ஷங்கர் மகன் எப்போது கோலிவுட்டில் கால் பதிப்பார் என கேள்விகள் எழுந்தன. சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கடந்த தீபாவளிக்கு பைசன் எனும் தரமான படத்தைக் கொடுத்து மாஸ் காட்டிவிட்டார். கருணாஸின் மகன் கென் 'யூத்' படத்தை இயக்கி நடித்து பிரதீப் ரங்கநாதன், அபிஷன் ஜீவிந்த் வரிசையில் வெற்றி இயக்குநராகவும் ஹீரோவாகவும் மாறியுள்ளார். கோலிவுட்டில் ஏகப்பட்ட அடுத்த வாரிசுகள் தரமாக உருவாகி வரும் நிலையில், தளபதி மகன் என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்துள்ளது.

Ken Karunas Youth movie turned Blockbuster Now all eyes focus on Vijay s Son Jason Sanjay s Sigma

சொல்லி அடித்த கில்லி: முட்டகலக்கி பாடல் வெளியான போதே கென் கருணாஸ் செம கான்ஃபிடன்ட்டாக இருந்தார். துரந்தர் 2 படத்துடன் மோதினால் யூத் படம் காணாமல் போய்விடும் என கென் மீது தனுஷ் நம்பிக்கையே இல்லாமல் இருந்தது போல சினிமா வட்டாரத்தில் பலரும் அவரை நம்பவே இல்லை. ஆனால், சொல்லி அடித்த கில்லி போல கென் கருணாஸ் விஜய் படத்தின் டைட்டிலான யூத் டைட்டிலில் எடுத்த திரைப்படம் மே 19ம் தேதி வெளியாகி கடந்த 4 நாட்களில் 23.68 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மாஸ் காட்டியுள்ளார். சுமார் 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான யூத் திரைப்படம் வசூலில் தூள் கிளப்பி வருகிறது.

Ken Karunas Youth movie turned Blockbuster Now all eyes focus on Vijay s Son Jason Sanjay s Sigma

சிக்ஸர் அடிப்பாரா 'சிக்மா'?: துரந்தர் படத்தின் 2 பாகங்கள் வெளியாகவே குறைந்த நாட்களே ஆகின்றன. தமிழ் சினிமாவில் வருடக் கணக்கில் எடுக்கப்படும் படங்களும் கங்குவா ரேஞ்சில் தான் வருகிறது என கலாய்த்து வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் இயக்கி வரும் சிக்மா படத்தின் டீசர் வெளியாகி 2 மாதங்கள் ஆகின்றன. சந்தீப் கிஷனை வைத்து விஜய் மகன் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் எப்போது வெளியாகும்? கருணாஸ் மகன் போல விஜய் மகனும் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றி சிக்ஸரை அடிப்பாரா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லைகா நிறுவனம் கூடிய சீக்கிரமே சரியான புரமோஷனுடன் படத்தை ரிலீஸ் செய்தால் பந்தயம் அடிக்கும் என்கின்றனர். தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் லைகா நிறுவனத்தையும் ஜேசன் சஞ்சய் தனது வெற்றி மூலம் தூக்கி நிறுத்துவாரா என்கிற எதிர்பார்ப்புகளும் கூடியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X