Youth Box Office: திங்கட்கிழமை அதிரடியாக சரிந்த ‘யூத்’ வசூல்.. 5 நாட்களில் மொத்தம் இத்தனை கோடியா?

சென்னை: கடந்த ஆண்டு பல பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலும் அவை ரசிகர்களை திருப்திப்படுத்த முடியாமல் திணறி படுதோல்வியை சந்தித்தன. பொங்கல் முதல் தீபாவளி வரை பாக்ஸ் ஆபீஸ் டல் தான். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியான பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை வேட்டையாடின.

கடந்த மாதம் வித் லவ் மற்றும் தாய் கிழவி உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை ஈட்டி வெற்றிப் படங்களாக மாறின. இந்நிலையில், மார்ச் மாதத்தில் எந்த படம் ஓடப் போகிறது என தமிழ் சினிமா யோசித்துக் கொண்டிருக்க கென் கருணாஸின் யூத் படம் சுமார் 30 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

Ken Karunas s Youth Day 5 Box Office Collection detail reports are here
Photo Credit:

வெறும் 5 நாட்களில் இந்தளவுக்கு கென் கருணாஸின் படத்தின் வசூல் வரும் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை வந்த 5 கோடி அப்படியே 1 கோடியளவுக்கு குறைந்துவிட்டது.

5வது நாள் வசூல்: கென் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதில், கடைசியாக அவர் காதலிப்பது சிறை படத்தில் நடித்த அனிஷ்மா அனில்குமாரை தான். ஆனால், அவரையும் கடைசியாக வேண்டாமென்று சொல்லிவிட்டு, அம்மா அப்பாவுக்காக நல்லா படிக்கக் கூடிய பிள்ளையாக மாறிவிடுவது தான் படம் தொடர்ந்து மக்களிடையே வரவேற்பை பெற காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு டிராகன் படமும் இதே பாணியில் வெளியாகி வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமையான நேற்று யூத் திரைப்படம் 1671 ஷோக்களில் மொத்தமாக 1.83 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

மொத்த வசூல்: தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஜாலியாக காமெடி காட்சிகள் நிறைந்த படங்களை மட்டுமே தியேட்டர்களில் வெற்றிப் பெறச் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு குடும்பஸ்தன் படத்தில் தொடங்கி இந்த ஆண்டு வெற்றிப் பெற்ற படங்கள் அனைத்திலும் கொஞ்சம் மெசேஜ் நிறைய காமெடி இருந்தால் அந்த படங்கள் மக்களிடையே க்ளிக் ஆகின்றன. கென் கருணாஸின் யூத் படம் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து இங்கே விவரமாக பார்க்கலாம்.

முதல் நாள் வசூல் - 3.60 கோடி
2வது நாள் வசூல் - 3.50 கோடி
3வது நாள் வசூல் - 4.90 கோடி
4வது நாள் வசூல் - 5.25 கோடி
5வது நாள் வசூல் - 1.83 கோடி

மொத்த வசூல் - 19.08 கோடி.

படக்குழு அறிவிப்பு: பர்வதா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான கென் கருணாஸின் யூத் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 28 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதன் படி திங்கட்கிழமை வசூலையும் சேர்த்து பார்த்தால் சுமார் 30 கோடி வசூலை 5 நாட்களில் யூத் படம் அள்ளியிருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த வாரம் ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ் படம் வெளியாகவுள்ள நிலையில், தொடர்ந்து யூத் 2வது வாரத்திலும் வசூல் அள்ளுமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X