ரவி மோகனுடன் இலங்கைக்கு போனதும் தேடித்தேடி நண்டு சாப்பிடும் கெனிஷா.. இன்ஸ்டாகிராம் வீடியோ டிரெண்ட்!

கொழும்பு: ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் விவாகரத்து செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்த பின்னர், தனது தோழி கெனிஷாவுடன் அடிக்கடி பொது வெளிகளில் காணப்படுகிறார். கெனிஷாவின் ஆல்பம் பாடல்கள் வெளியீட்டில் ரவி மோகன் மிகவும் முக்கியமான நபராக கலந்து கொள்கிறார். அண்மையில் கூட இருவரும் இலங்கைக்குச் சென்று அங்கு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் இலங்கையில் கெனிஷா தான் ஜாலியாக நேரத்தை கழிக்கும் தருணங்களை வீடியோக்களாக பதிவு செய்து பகிர்ந்து வருகிறார்.

ஆர்த்தி ரவி - ரவி மோகன் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தமிழ் சினிமாவில் பலரது கவனத்தை ஈர்த்த, அன்பைப் பெற்ற ஜோடியாக இவர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் கடந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ரவி மோகன் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

Keneesha Eats sea crabs at Srilanka Colombo With Ravi Mohan Instagram Story
Photo Credit:

ஆர்த்தி ரவி - ரவி மோகன் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா என சிலர் கூறினார்கள். ஆனால் ரவி மோகனோ கெனிஷா தனது தோழி, நாங்கள் இருவரும் எதிர் காலத்தில் ஹீலிங் சென்டர் தொடங்கவுள்ளோம். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையில்லாமல் நுழையாதீர்கள் என கெனிஷா குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக பொதுவெளியில் தென்படுவது இவர்கள் இருவர் குறித்த கிசுகிசுவை அதிகரித்தது.

ரவி மோகனுக்கு எதிர்ப்பு: இதனால் ரவி மோகனுக்கு இணையவாசிகள், ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்த்தி ரவி, இரண்டு மகன்களைப் பிரிந்து வாழ அவருக்கு எப்படி மனது வந்தது என்றெல்லாம் கேள்வி கேட்டார்கள். பயில்வான் ரங்கநாதன் போன்றோர் எல்லாம் ரவி மோகனை மிகவும் காட்டமாக விமர்சித்தார்கள். இது இப்படி இருக்க, ரவி மோகனும் கெனிஷாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களோ, வீடியோ துணுக்குகளோ வெளியாகும் தருணங்களில் ரசிகர்கள், இணையவாசிகள் என பலரும் உடனே ஆர்த்தி ரவியின் சமூக வலைதளப் பக்கத்தை தேட ஆரம்பித்து விடுகிறார்கள். காரணம் ஆர்த்தி ரவி ஏதாவது ரியாக்ட் செய்துள்ளாரா இல்லையா என்பது குறித்து தெரிந்து கொள்ளத்தான்.

தனி வரவேற்பு: இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றுள்ளது. அதாவது கெனிஷா பகிர்ந்துள்ள இரண்டு ஸ்டோரிகளிலும் ஹோட்டலில் தான் உள்ளார். அதாவது இலங்கை கொழும்புவில் உள்ள ஹோட்டலில் நண்டு ஆர்டர் செய்துள்ளார். அதனை அந்த ஹோட்டல் எப்படி பரிமாறியது, அதை அவர் எவ்வாறு சாப்பிட்டார் என்பதை பகிர்ந்துள்ளார்.

Keneesha Eats sea crabs at Srilanka Colombo With Ravi Mohan Instagram Story
Photo Credit:

நண்டு: மிகப்பெரிய நண்டினை பரிமாறிய ஹோட்டல் ஊழியர்கள் அதனை டேபிளில் வைத்த பின்னர், அதன் மீது தீயை பொழிந்து, ஏற்கனவே சமைக்கப்பட்ட நண்டின் மீது தீ மூட்டினார்கள். அதன் பின்னர் நண்டை ருசித்துச் சாப்பிடுகிறார் கெனிஷா. தனது இரண்டு கைகளிலும் கிளவுஸ் அணிந்து கொண்டு, நண்டினை ருசித்துச் சாப்பிடுகிறார். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ரவி மோகனுடன் இலங்கைக்கு சென்றுள்ள கெனிஷா நன்றாக நண்டு சாப்பிடுகிறாரே என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X