Keneeshaa: ச்சீ.. கெனிஷாவுக்கு கேவலமாக மெசேஜ் செய்யும் இணையவாசிகள்.. அனைத்தையும் பட்டியலிட்ட கெனிஷா!
சென்னை: கடந்த வாரத்தில் இருந்து மொத்த கோலிவுட்டுமே பரபரப்பாக பேசிவரும் விஷயங்களில் ஒன்று ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தொடர்பாகத்தான். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஆர்த்தி தரப்பில் இருந்து மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரவி மோகன் தரப்பில் பதில் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் பாடகி கெனிஷா என்று கூறப்படுகிறது. ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் கெனிஷாவின் பெயர் குறிப்பிடபடாமல், மூன்றாவது நபர் எங்கள் வாழ்க்கைக்குள் வந்ததால்தான் நாங்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கான ஆதாரம் என்னிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் ஷாக் கொடுத்த நிலையில், ஏற்கனவே கெனிஷாவை அட்டாக் செய்து வந்த இணையவாசிகள், தற்போது கூடுதலாக அட்டாக் செய்து வருகிறார்கள்.

கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நேரடியாக மெசேஜ் செய்யும் இணையவாசிகள் கெனிஷாவை மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். கெனிஷாவும் தன் மீது வைக்கப்படும் மோசமான விமர்சனங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார். குறிப்பாக இணையவாசிகள் பயன்படுத்திய மோசமான வார்த்தைகளை அப்படியே அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயரோடு பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாவம் சும்மா விடாது: இணையவாசிகள் பலரும் கெனிஷாவை மிகவும் கீழ்தரமாக விமர்சித்தாலும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் பொதுவான விஷயமாக இருப்பது சில கருத்துக்கள் தான். அதாவது, " ரவியை விட்டு விட்டு போய்விடு. ரவியை அவரது அழகான குடும்பத்துடன் வாழவிடு. வெறுமனே பணத்திற்காகவும் புகழுக்காகவும் ஒரு குடும்பத்தை சீரழித்த விட்டாய், இதற்கு கட்டாயம் நீ பதில் சொல்லியே ஆகவேண்டும். ரவியும் பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த இரண்டு குழந்தைகளின் பாவம் உங்களை சும்மா விடாது. உனக்கு குடும்பம் இல்லையா? உனது பெற்றோர்கள் உனக்கு இதைச் சொல்லித்தான் வளர்த்தார்களா?" என பலவற்றை கேட்டு வருகிறார்கள்.
நீதிமன்றத்திற்கு வர தயார்: கெனிஷா இவற்றையெல்லாம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நான் எனது கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்யப்போவது கிடையாது. மேலும், நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன். யார் பின்னாலும் நான் சென்று ஒளிந்து கொள்ளவும் போவதில்லை. நான் இங்கே தான் இருக்கப் போகிறேன். நீங்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். நீதிமன்றம் சொல்லட்டும் என் மீது தவறு என்று. உங்களுக்கு தைரியம் இருந்தால் என் முகத்தைப் பார்த்து என் மீதான விமர்சனத்தை முன் வையுங்கள், நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதற்கு முன்னர் எனது தரப்பில் சொல்வதையும் கேட்டுவிட்டு விமர்சியுங்கள்.

கடவுள் பார்த்துக் கொள்ளட்டும்: அதை விட்டுவிட்டு உருவக்கேலி செய்வது, பொய்களைப் பரப்புவது, அவதூறுகள் பரப்புவது, கொலை மிரட்டல் விடுவது போன்றவற்றை தவிருங்கள். நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். என்னை கர்மா தண்டிக்கும் என்று கூறுகிறார்கள். நான் உண்மை ஒருநாள் அனைவருக்கும் தெரியவரும். உண்மைதான் நிகரில்லாதது. என் மீது வைக்கப்படும் வசை சொற்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை நான் கடவுளிடம் கொடுத்துவிடுகிறேன். கடவுள் பார்த்துக் கொள்ளட்டம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











