ரவி மோகனுக்கு அவங்க அனுமதி கொடுக்கல.. கடந்த வாழ்க்கையில் ரொம்ப கஷ்டம்.. ஆர்த்தி ரவியை வம்பிழுத்த கெனிஷா
சென்னை: ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் நடந்தது. அவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மணமுடித்த பிறகு சிறந்த ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். இரண்டு மகன்களையும் பெற்றெடுத்தார்கள்.ஆனால் கடந்த 2024ஆம் ஆண்டு ஆர்த்தியை பிரிவதாக திடீரென அறிவித்தார். அதனையடுத்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாகியிருக்கிறார். இந்நிலையில் கெனிஷா வெளியிட்டிருக்கும் வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் நல்ல நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர் ரவி மோகன். அவர் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து இரண்டு மகன்களுக்கு தந்தையானார். சூழல் இப்படி இருக்க ஆர்த்தியுடன் வாழ்வதற்கு தனக்கு பிடிக்கவில்லை என சொல்லி கடந்த 2024ஆம் ஆண்டு பிரிவை அறிவித்தார். அதனை ஆர்த்தி எதிர்பார்க்கவில்லை. எப்படியாவது ரவியுடன் சேர்ந்துவிட வேண்டும் என்று முட்டி மோதினார். ரவியோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டார். ஆர்த்தியின் தாயும் முயன்று பார்த்தார். ஆனால் இவர் அசைந்து கொடுக்கவில்லை.

என்ன காரணம்?: இந்தப் பிரிவுக்கு பலரும் பல காரணங்களை சொன்னார்கள். அப்படிப்பட்ட நிலைமையில் தனக்கு எந்தவிதமான மரியாதையும் ஆர்த்தி தரப்பிலிருந்து கொடுக்கவில்லை. பணமே இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். வேலைக்காரர்களுக்கு கிடைத்த மரியாதைகூட எனக்கு கிடைக்கவில்லை என பல விஷயங்களை அடுக்கியிருந்தார். இப்போதைக்கு சங்கீதா விஜய் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் போன்றே; ஆர்த்தி மீதும் அவரது தாய் மீதும் அப்போது ரவி வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
கெனிஷாவுடன் நெருக்கம்: இது ஒருபக்கம் இருக்க கெனிஷாவுடன் ரவிக்கு நெருக்கம் ஏற்பட்டது. முதலில் அதை மறுத்த அவர்; பின்னர் பொதுவெளிக்கு அவருடன் ஜோடியாக வர ஆரம்பித்தார். இப்போது அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரவி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோதெல்லாம் முன்னணியில் கெனிஷாதான் நின்றுகொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ரவியின் குடும்பத்திலும் அவர் நெருக்கம் காட்டுவதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
இயக்குநர் ரவி மோகன்: இப்படி ரவியின் பெர்சனல் வாழ்க்கை சர்ச்சையை சந்தித்து ஓய்ந்திருக்கிறது. தற்போது அவர் இயக்குநராகவும் அறிமுகமாகவிருக்கிறார். யோகி பாபுவை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் பூஜை நேற்று நடந்தது. முதன்முறையாக ரவி இயக்குநர் ஆகியிருப்பதால் அந்தப் படம் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாகியிருக்கிறார்கள். இந்நிலையில் ரவி இயக்குநராக மாறியது தொடர்பான கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
கெனிஷா பேசியது: அவர் பேசுகையில், "ரவி மோகனுக்கு வாழ்த்துகள். நீங்கள் எது செய்தாலும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். மொத்த பிரபஞ்சமும் உங்களுக்கு துணையாக இருக்கும். நீங்கள் முதல் படம் இயக்குவதை நினைத்து பெருமையாக இருக்கிறது. அந்தப் படத்தின் கதை எனக்கு தெரியும். இத்தனை வருடங்களாக காத்திருந்தீர்கள். இந்தப் படத்தை இயக்குவதற்கு நீண்ட காலமாக முயற்சித்தீர்கள். பத்து வருடங்களாவது இருக்கும்.
பெர்மிஷன் கிடைக்கவில்லை: ஆனால் சிலரிடமிருந்து அதற்கு உங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. கடந்த வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு கஷ்டத்தை சந்தித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இப்போது நீங்கள் இருப்பதை பார்த்து உங்கள் பெற்றோர் பெருமைப்படுவார்கள். குடும்பத்தினர் பெருமைப்படுவார்கள். நீங்கள் எப்போதும் அன்பைத்தான் பரப்பியிருக்கிறீர்கள். படத்தை பார்த்து பார்த்து இயக்குகிறீர்கள். என்ன நடந்தாலும் சரி; எவ்வளவு நெகட்டிவிட்டி பரவினாலும் நான் எப்போதும் உங்கள் பக்கம்தான் நிற்பேன்." என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து சொன்னால் அதை மட்டும் சொல்ல வேண்டியதுதானே. ஏன் கடந்த கால வாழ்க்கையை இழுத்து ஆர்த்தி ரவியை வம்பிழுக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications















