ரவி மோகன் விவகாரம்.. புது புது புயலை கிளப்பும் கெனிஷா.. ஆர்த்தி மீது தொடர் அட்டாக்?

சென்னை: ஆர்த்தியை கடந்த வருடம் விவாகரத்து செய்த நடிகர் ரவி மோகனுக்கும், பாடகி கெனிஷா பிரான்சிஸுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போதே கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் நாங்கள் நண்பர்கள் மட்டும்தான் நீங்கள் நினைக்கும்படி எதுவும் இல்லை என்று ரவி தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ஜோடியாக ரவி வந்திருந்தது இந்த விஷயத்தில் பரபரப்பை கூட்டியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசு, சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்க்கையை நகர்த்திவந்தவர் நடிகர் ரவி மோகன். அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு முழு காரணமும் நடிகை குஷ்புதான் என்று சொல்லப்படுவதுண்டு. ரவியும், ஆர்த்தியும் தங்களது வாழ்க்கையை சுமூகமாகத்தான் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்த்க்கது.

விவாகரத்து செய்த ஜோடி: நிலைமை இப்படி இருக்க கடந்த வருடம் ரவி மோகன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், தான் ஆர்த்தியை விட்டு பிரிவதாக தெரிவித்திருந்தார். அதற்கு ஆர்த்தியோ, 'இந்த விவாகரத்து முடிவு குறித்து ரவி தன்னிடம் எதுவும் பேசவில்லை. தான் பேச முயன்றாலும் அவரிடம் பேச முடியவில்லை' என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனையடுத்து அவருக்கும் ரவிக்கும் சமாதானம் செய்து வைக்கும் முயற்சிகளும் தொடங்கின. ஆனால் விவாகரத்து என்பதில் ரவி உறுதியாக இருந்ததால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

Kenisha Instagram Story About Ravi Mohan And Aarti Ravi

என்ன காரணம்?: இரண்டு பேரின் விவாகரத்துக்கு காரணமே ஆர்த்திதான். அவரும், அவரது தாயும் சேர்ந்து ரவியை ரொம்பவே கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. அதேபோல் இன்னொரு பக்கமோ, 'பின்னணி பாடகி கெனிஷாவுக்கும், ரவிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த பிரிவு' என்றும் சொன்னார்கள். ஆனால் தன்னை கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி வந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார் ரவி. பிறகு இவ்விஷயம் கொஞ்சம் மறைந்தது.

மீண்டும் ஹெட்லைன்ஸ்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் ரவி மோகன் தனது தோழி கெனிஷாவுடன் கலந்துகொண்டார். இரண்டு பேரும் ஒரே நிறத்திலான உடையை அணிந்திருந்தார்கள். மேலும் மண்டபத்துக்குள் செல்லும்போது ரவி கெனிஷாவின் கைகளை பிடித்து பத்திரமாக அழைத்து சென்றார். இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். மேலும் இரண்டு பேருக்கும் காதல்தான் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

மௌனம் உடைத்த ஆர்த்தி: பொதுவெளியில் தங்களது உறவை ரவி உறுதிப்படுத்திவிட்டதாக பேசப்படும் நிலைமையில், ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், "14 மற்றும் 10 வயது மகன்களுக்கு கடந்த பல மாதங்களாக ஏதாவதொரு கதையை சொல்லி சமாளிக்கிறேன். ஆனால் இன்று உலகமே பார்க்கும் அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருக்கிறது. இதை நான் பொறாமையாகவோ, கண் கலங்கியோ சொல்லவில்லை. ஒரு தாயாக சொல்கிறேன். தந்தை என்பது பெரிய பொறுப்பு. அந்த பொறுப்பை துச்சமாக தூக்கி எறிந்து செல்பவர்களை பிரபஞ்சம் சும்மா விடாது. நாங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. எனவே யாரும் ரவியின் முன்னாள் மனைவி என சொல்ல வேண்டாம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

கெனிஷாவின் பதிவு: ஆர்த்தியின் அந்த அறிக்கைக்கு பிறகு அவருக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது. மேலும் கெனிஷாவை பலரும் வெளுக்க தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தியை மறைமுகமாக தாக்கும் வகையில் பல ஸ்டோரிகளை வைத்துவருகிறார். அந்தவகையில் அவர் வைத்திருந்த ஒரு ஸ்டோரியில், 'ஒரு ஆண் எப்போதும் ஒரு குழப்பமான உணர்வுகளை விரும்பமாட்டார். அவரது இதயம் அமைதியை உணரும், விரும்பும் பெண்ணின் பக்கம் சாயும். அமைதி என்பது ஃபெர்பார்மன்ஸ் அல்ல. அது ஒரு பவர். அந்தப் பெண் ஆணின் வலிமையுடன் போட்டியிடாமல் அந்த வலிமை சமநிலையில் இருக்க செய்கிறார். அப்படி இரண்டுபேரும் ஒருவருக்கொருவரின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, ஆர்த்தி அமைதியானவர் இல்லை அதனால்தான் தன் பக்கம் ரவி சாய்ந்தார் என்பதை மறைமுகமாக இப்படி சொல்கிறாரோ என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X