அய்யோ என்னால முடியல..ரவி மோகனுடன் பிரேக் அப்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு போட்ட கெனிஷா!

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், ரவி மோகன் மனைவியை பிரிவதற்கு காரணமே தோழி கெனிஷா தான் என குற்றச்சாட்டு எழுந்து. சமூக வலைதளத்தில் கெனிஷாவை பலரும் விமர்சித்தனர். இதையடுத்து, பாடகி கெனிஷா நேற்று வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, 4 வயதில் இருந்தே நான் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டேன், எனது பெற்றோர்கள் இருவரையும் இழந்துவிட்டேன்.18 வயதில் திருமணம், அந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கொடுமை, வயிற்றில் இருந்த குழந்தை இறப்பு என எனது வாழ்க்கையில் நான் நிறைய இழப்பை சந்தித்து இருக்கிறேன். அப்படிப்பட்டவளா ஒரு குடும்பத்தை கெடுப்பேன் என வேதனையுடன் பேசி இருந்தார்.

பாடகி கெனிஷா: இதைத்தொடர்ந்து தற்போது பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் மனவேதனையுடன் சில விஷயத்தை பதிவிட்டுள்ளார். அதில், சென்னை நகரத்தை விட்டு வெளியேறுகிறேன். இசை, சிகிச்சை (therapy), இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை அனைத்தையும் விட்டுவிடுகிறேன். ஆன்லைன் தொல்லை, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுகிறேன். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் தனக்கு தேவையான தனியுரிமையை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Ravi Mohan Kenishaam breakup
Photo Credit:

ரவி மோகனை பிரிந்தாரா?: இந்த விஷயம் குறித்து நான் அதிகமாக பேசிவிட்டேன், இதற்கு மேலும், தன்னை நல்லவளாக நிரூபிக்க முயற்சி செய்ய மாட்டேன். இனிமேல் அமைதியாக விலகிச் செல்கிறேன். ஒருவரை காப்பாற்றவும், ஆதரிக்கவும் முயன்றேன். ஆனால் மக்கள் ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு முடிவு செய்துவைத்து இருக்கிறீர்கள். இந்த உலகம் நல்லவர்களை விட பொய்யர்கள், சூழ்ச்சியாளர்கள், ஏமாற்றுபவர்களையே அதிகம் நம்புகிறது. அவரை இப்போது உலகத்திடம் விட்டுவிடுகிறேன். இனிமேல் எந்த விளக்கமும், பாதுகாப்பும், போராட்டமும் இருக்காது. உண்மையான அன்பு, விசுவாசம், மென்மை ஆகியவற்றை உலகம் மதிக்கவில்லை. நீங்கள் விரும்பியது நடந்துவிட்டது. கடைசியாக பெண்வாதம் ஜெயித்துவிட்டது. ஆனால் மகிழ்ச்சி தோற்றுவிட்டது என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கெனிஷாவின் இந்த பதிவினை பார்த்த பலர் சென்னையைவிட்டு போகிறீர்களா... இல்லை ரவி மோகனை விட்டு பிரிகிறீர்களா... பிரேக் அப் செய்துவிட்டீர்களா? என கேட்டு வருகின்றனர். கெனிஷாவின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ளது.

Read more about: ravi mohan breakup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X