கவர்ச்சி உடையில் கலக்கும் கெனிஷா.. ஆத்தாடி செம கவர்ச்சி.. ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல
சென்னை: பின்னணி பாடகியான கெனிஷா சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு ரவியோடு வந்திருந்தார். அப்போதிருந்து கோலிவுட்டில் அவர் பெயர் அடிக்கடி அடிபடுகிறது. சமீபத்தில்கூட அன்றும் இன்றும் என்ற சிங்கிள் பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் பிகினியில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
சினிமா துறைக்குள் நுழைந்து பெயரும் புகழும் செல்வமும் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கெனிஷா. தெரப்பிஸ்ட்டாக இருந்தாலும் பாடுவதிலும் இசையமைப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். ஏற்கனவே சில ஆல்பம் பாடல்களை அவர் உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவரை சுற்றாத வெளிச்சமும், சர்ச்சையும் இப்போது சுற்ற ஆரம்பித்திருக்கிறது.
இதுதான் காரணம்: அதற்கு காரணம் என்னவென்றால் அவர் ரவியுடன் இணைத்து கிசிகிசுக்கப்பட்டதுதான். முதலில் ரவி அதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு ரவியோடு கெனிஷா வந்திருந்தார். அது பெரிய பேசுபொருளானது. மேலும் ஆர்த்தி, சுஜாதா, ரவி என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அறிக்கைகளையும் வெளியிட தொடங்கினார்கள்.

கெனிஷாவின் பேட்டி: ஆனால் கெனிஷாவோ தனது கரியரில் பெரிய கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அவர் கொடுத்த ஒரு பேட்டியில், 'நான் எனது சோல் மேட்டை கண்டுபிடித்துவிட்டேன்' என்று தெரிவித்தார். அந்த சோல் மேட் ரவி மோகன்தான் என்று பலரும் சொன்னார்கள். சூழல் இப்படி இருக்க தனது பெயர் தொடர்ந்து அடிபடுவதால் இனி இந்த விவகாரத்தில் தன்னை இழுக்கக்கூடாது என்று அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
அன்றும் இன்றும்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் பாடல்கள் உருவாக்குவதில் மும்முரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் அன்றும் இன்றும் என ஒரு சிங்கிள் பாடலை இசையமைத்து பாடியிருந்தார். அது ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பையே கொடுத்தது. கண்டிப்பாக தமிழ் இசை துறையில் கெனிஷாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பது பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
வாழ்வின் ஒளி: இதற்கிடையே கெனிஷா குறித்து அண்மையில் பேசிய ரவி, 'அவர் எனது வாழ்க்கையின் ஒளி' என்று தெரிவித்திருந்தார். மேலும் ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு ஒரு பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மாதவன், சுதா கொங்கரா, தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் ட்ரெண்டாகின.
பிகினியில் கெனிஷா: மேலும் இரண்டு பேரும் சேர்ந்து பார்ட்டி வைத்ததால் கண்டிப்பாக அவர்கள் விரைவில் வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகிறார்கள் என்ற ஆரூடமும் கூறப்படுகிறது. இந்நிலையில் தீவு ஒன்றில் கெனிஷா பிகினியில் கேஷுவலாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதனைப் பார்த்த ரசிகர்களோ, 'பிகினியில் கெனிஷா இவ்வளவு கவர்ச்சியா இருக்காங்களே' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
முன்னதாக ரவியும் தன்னை சுற்றி பிரச்னைகள் சுற்றிக்கொண்டிருந்தாலும் கரியரில் முழு கவனத்தை செலுத்திவருகிறார். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லன் ரோலை ஏற்றிருக்கும் அவர்; ஜீனி என்ற படத்திலும் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











