ரவி மோகன் விவகாரம்.. நாளை புதிய தொடக்கமாம்.. கெனிஷா போட்ட செம போஸ்ட்
சென்னை: ரவி மோகனும் ஆர்த்தியும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு காதலோடு வாழ்ந்துவந்த அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க திடீரென ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். அந்த முடிவுக்கு காரணமே பாடகி கெனிஷாவுடனான தொடர்பு என்று பலரும் பேசிய சூழலில்; அதை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
ரவி மோகன் விவகாரம்தான் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு தமிழ்நாட்டில் ஹெட்லைன்ஸாக மாறியிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு தனது தோழி கெனிஷாவுடன் வந்திருந்தார் அவர். இதற்கிடையே ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். ஆனால் ரவியை விட்டு விலகுவதில் முழு மனதோடு ஆர்த்தி ஒத்துக்கொள்ளவில்லை. அதைத்தான் அவரது அறிக்கைகளும் உணர்த்துகின்றன.
ஆர்த்தியின் அறிக்கை என்ன?: கெனிஷாவுடன் ரவி அந்தத் திருமணத்துக்கு வந்த பிறகு ஆர்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், "தந்தை என்பது வெறும் பட்டம் அல்ல. அது பெரிய பொறுப்பு. அதிலிருந்து அவர் நழுவி சென்றுவிட்டார். தன்னுடைய பெயர் இன்னமும் ஆர்த்தி ரவிதான். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை என்னை ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம். ஒரு தாயாக நான் குரல் எழுப்புகிறேன்' என்று பல விஷயங்களை குறிப்பிட்டு உருக்கத்தோடு தெரிவித்திருந்தார். அவரது அறிக்கையை அடுத்து அவருக்கு நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுஜாதாவின் அறிக்கை: இந்த விஷயத்தில் ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா மீதுதான் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். முக்கியமாக ரவி மோகன் அளித்திருந்த விளக்கத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் இரண்டு பேர் மீதும் வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கு பிறகு சுஜாதா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையிலோ, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன்.
மனதுக்கு இல்லை: அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை" என கோரிக்கையை வைத்திருந்தார்.
உறுதியான ரவி: ஆனால் ரவியை பொறுத்தவரை ஆர்த்தியுடன் இனி சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் திடகாத்திரமாக இருக்கிறார். இதற்கிடையே கெனிஷாவும் தன் பங்குக்கு பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசிய அவர், 'நான் எனது சோல் மெட்டை கண்டுவிட்டேன். இந்த சோல் மெட் ரொம்பவே அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறார்' என தெரிவித்திருந்தார். பேட்டி மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் அவர் போடும் போஸ்ட்டுகள் பெரிய கவனத்தை ஈர்க்கின்றன.
சமீபத்திய போஸ்ட்: அந்தவகையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று, "இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன. மேலும் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











