யாரும் இல்லாதபோது.. போட்டியே வேண்டாம்.. கெனிஷா தத்துவ மழையா பொழிஞ்சிருக்காங்களே

சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருக்கிறார். தனக்கு ரவி 40 கோடி ரூபாய் மாதா மாதம் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டுமென ஆர்த்தி தரப்பு கோரிக்கையும் வைத்தது. இதற்கிடையே ரவியுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு வந்ததிலிருந்து பின்னணி பாடகி கெனிஷா தமிழ்நாட்டில் வெகு பிரபலமடைந்திருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிம் போஸ்ட்டுகள் ட்ரெண்டாகியிருக்கின்றன.

கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் ரவி மோகன் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருக்கிறார். ஆர்த்தி தரப்பிலிருந்து தனக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார் அவர். அதேசமயம் இந்த பிரிவு குறித்து தன்னிடம் ஆலோசிக்கவே இல்லை. இது தனக்கு அதிர்ச்சி கொடுக்கிறது என்று ஆர்த்தியும் தன்னுடைய தரப்பை விளக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெனிஷாவுடன் ரவி: ஒருகட்டத்தில் இந்தப் பிரச்னை ஓய்ந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்துக்கு கெனிஷாவுடன் வந்திருந்தார் ரவி. ஏற்கனவே ரவிக்கும், கெனிஷாவுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது; எனவேதான் இந்த பிரிவு நிகழ்ந்ததாக ஒருதரப்பினர் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அதனை ரவி மோகனோ திட்டவட்டமாக மறுத்திருந்தார். அப்படிப்பட்ட சூழலில் கெனிஷாவுடன் அவர் ஜோடியாக வந்தது இவ்விஷயத்தில் பரபரப்பை கூட்டியது.

Kenisha s philosophies on Instagram have become trending
Photo Credit:

ஃபேமஸான கெனிஷா: கெனிஷா பெங்களூரில் வளர்ந்தவர். அவர் ஒரு பின்னணி பாடகி ஆவார். ஏற்கனவே சில ஆல்பங்களை வெளியிட்டிருந்த அவர்; ரவியுடன் ஜோடியாக வந்த பிறகு லைம் லைட்டுக்கு வந்தார். சமீபத்தில்கூட அன்றும் இன்றும் என்ற சிங்கிள் பாடலை வெளியிட்டிருந்தார். அந்தப் பாடலுக்கு இசையமைத்து நடனமும் ஆடியிருந்தார். அந்த சிங்கிள் பாடல் ரசிகர்களிடம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.

இன்னும் ஆல்பங்கள்: அவரை பொறுத்தவரை இன்னும் நிறைய ஆல்பங்கள் வெளியிட வேண்டுமென்றும்; இசை துறையில் தனக்கென ஒரு பெயரை பெறவும் முயன்றுகொண்டிருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் ரவியும் கெனிஷாவும் சேர்ந்து திரைத்துறையினருக்கு ஒரு பார்ட்டி வைத்தார்கள். அதில் சுதா கொங்கரா, மாதவன் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள். இரண்டு பேரும் ஜோடியாகவே இருப்பதால் கண்டிப்பாக அவர்கள் இரண்டு பேருக்கும் விரைவில் நல்ல விஷயம் நடக்கும் என்று கருத ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர்.

கெனிஷா இன்ஸ்டா: இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் கெனிஷா இப்போது சில புகைப்படங்களை பகிர்ந்து தத்துவங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனது போஸ்ட்டில், 'யாருமே இல்லாதபோது நீங்கள் உங்களிடம் பேசுவதுதான் எல்லாமே' என்றும், 'உங்களை ஒப்பிட முடியாத இடத்தில் நீங்கள் போட்டியே போடாதீர்கள்' என்றும்; மேலும் சில தத்துவங்களையும் கூறியிருக்கிறார். இந்த போஸ்ட்டுகள் அனைத்தும் ரசிகர்களிடையே ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X