இன்று பிறந்தநாள் காணும் இயக்குநர் இமயம்.. வாழ்த்து சொல்லும் கென்னடி கிளப் படக்குழு!

Recommended Video

சினிமாவை திரித்து எழுதியவரின் பயணம் | History of Bharathiraja

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு கென்னடி கிளப் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பதினாறு வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் பாரதிராஜா. கருத்தம்மா, முதல் மரியாதை, காதல் ஓவியம், கிழக்கே போகும் ரயில் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தரமான இயக்குநரானார்.

kennady club Movie team wishes Bharathiraja

இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் பாரதிராஜா. பாரதிராஜா சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறை பெற்ற பெறுமை கொண்டவர்.

ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பிலிம் ஃபேர் விருதுகளையும் குவித்திருக்கிறார் பாரதிராஜா. திரைத்துறையில் இவரது சாதனையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

இயக்குநர் பாரதிராஜா கல்லுக்குள் ஈரம், பாண்டிய நாடு, அண்மையில் வெளியான கென்னடி கிளப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று பாரதிராஜவின் 78வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் பாரதிராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிவருகின்றனர். அந்த வகையில் அவர் சமீபத்தில் நடித்து வெளியான கென்னடி கிளப் படக்குழுவினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் இமான், நடிகர்கள் சசிகுமார், சூரி உள்ளிட்ட பலரும் பாரதிராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரதிராஜாவை அப்பா என்று குறிப்பிட்டுள்ள இயக்குநர் சுசீநிந்திரன் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இயங்குவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

அவர்களுடன் இணைந்து கென்னடி கிளப் படத்தில் நடித்த கபடி வீராங்கணைகளும் பாரதிராஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். கென்னடி கிளப் படக்குழுவினரின் வாழ்த்து வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X