twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கென்னடி கிளப் படத்திற்காக உண்மையாகவே கபடி ஆடிய நடிகர்கள்

    |

    Recommended Video

    Vennila Kabadi Kuzhu 2 - படத்துல உள்ள எல்லா மேட்ச்சும் ரியல்-ஆ பண்ணினோம்

    சென்னை: கென்னடி கிளப் படத்துல நடிச்ச வீராங்கனை எல்லாருமே உண்மையிலேயே கபடி விளையாட்டுல ஜெயிச்சி நெறைய கப்பெல்லாம் வாங்கி இருக்காங்கன்னு தெரியவந்திருக்கு.

    வெண்ணிலா கபடிக் குழு படம் போன 2009ஆம் ஆண்டு வெளிவந்திச்சி. இந்தப் படத்துல தான் நம்ம விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, அப்புக் குட்டி, பரோட்டா முரளின்னு முக்கியமானவங்கள்லாம் அறிமுகமானாங்க. கபடியை மையமா வச்சி எடுத்ததுனால இந்தப் படம் அபார வெற்றி பெற்றிச்சி.

    Kennady club players really played in Movie

    இந்த வெற்றிக்கு அப்புறம் உடனடியா 2ஆம் பாகம் உடனடியா வெளிவரும்னு எல்லாருமே எதிர்பாத்தாங்க. ஆனா அந்தப் படத்துக்கு அப்புறம் அதுல நடிச்சவங்க எல்லாருமே பிசியான நடிகருங்களா ஆகிட்டதுனால 2ஆம் பாகம் எடுக்குறது தொடர்ந்து தள்ளிப்போய்ட்டே இருந்தது. இப்ப போன மாசம் 2ஆம் பாகமும் வெளிவந்துடிச்சி.

    இப்ப அதே கபடி கான்செப்டல லேடீஸ் கபடி வெளையாடுற மாதிரி கதை ரெடி பண்ணி கென்னடி கிளப்ன்னு படம் தயாராகிட்டு வருது. இந்தப்படத்துல உண்மையிலேய கபடி வீராங்கனைங்க நடிச்சிருக்காங்க. வெண்ணிலா கபடி குழு மொத பாகத்தை எடுத்த சுசீந்திரன் தான் இந்தப் படத்தையும் டைரக்ட் பண்றாரு. இந்தப் படத்துல ஹீரோவா சசிகுமாரும், முக்கியமான கேரக்டர்ல டைரக்டர் பாரதிராஜாவும் நடிச்சிருக்காங்க.

    எல்லத்தையும் விட இந்தப் படத்துல உண்மையிலேயே கபடி ஆடுற பொம்பளை வீராங்கனைங்க ந(அ)டிச்சு வெளையாடி தூள் கௌப்பி இருக்காங்க. இவங்க நெசமாவே கபடி போட்டியிலே பங்கெடுத்துக்கிட்டு நேஷனல் லெவல் வெளையாண்டு நெறய கப்பெல்லாம் வாங்கி குவிச்சிருக்காங்கன பாத்துக்கோங்க.

    இந்த கென்னடி கிளப்ப சேர்ந்த வீராங்கனைங்க தொடர்ச்சியா 6 தடவ கபடி போட்டியில ஜெயிச்சி முதலவர் கையால கப்பெல்லாம் வாங்கியிருக்காங்கன்னா பாத்துக்கோங்க. இந்த கென்னடி கிளப் படத்துல இருக்குற கபடி போட்டிங்கெல்லாம் ரியலா நடந்த போட்டிங்க. எதுவுமே ரீல் கெடையாது. உசுர கொடுத்து வெளையாண்டு இருக்காங்க.

    இந்தப் படத்துல கபடி கோச்சா நடிச்சிருக்குறது சசிகுமார். நல்லு சாமி கேரக்டர்ல டைரக்டர் பாராதிராஜா பண்றார். இந்த படத்தோட கான்செப்ட் உருவாக காரணமே டைரக்டர் சுசீந்திரனோட அப்பா நல்லுசாமி தான். அவரு தான் வெண்ணிலா கபடிக் குழுவையே ஃபார்ம் பண்ணினாரு. அவரு தான் பெண் வீராங்கனைங்க கபடி வெளையாண்டு கஷ்டப்பட்டு ஜெயிச்சி, பின்னாடி வேலை வாய்ப்ப தேடுறதுல எவ்வளவு சிரமப்படுறாங்கங்கறத நேரடியா பாத்து தெரிஞ்சிகிட்டு அவரு தான் இந்த ஐடியாவ கொடுத்தாரு. இந்த படம் உருவாக இன்னொரு முக்கியமான விஐபி யாருண்ணா எம்எல்ஏ சக்ரபாணி தான், அவரு தான் எல்லா ஹெல்ப்பும் பண்றார்.

    இந்தப் படத்துல இந்த வீராங்கனைங்க கூட சசிகுமார், இயக்குநர் இமையம் பாரதி ராஜா இவங்கல்லாம் நடிச்சிருக்காங்க. இதப் பத்தி சொன்ன கபடி வீராங்கனைங்க, நாங்கள்லாம் இவங்க கூட நடிச்சதையே ரொம்ப பெருமையா நெனைக்கிறோம். ஒரு காலத்துல இவங்க கூட நின்னு ஒரு ஃபோட்டோவாவது எடுக்க முடியுமான்னு ஏங்கி இருக்கோம். ஆனா இப்ப இவங்ககூட ஒண்ணா சேந்து நடிக்கிறதையே எங்களால இன்னும் நம்ப முடியல அப்பிடிங்கறாங்க.

    பெண்கள் கபடியோட கோச் என்ன சொல்றார்ன பெண்கள் உண்மையிலேய வறுமையினாலதாங்க கபடி வெளையாடவே வந்திருக்கோம். இதுல ஜெயிச்சோம்னா பின்னாடி ஈசியா வேலைக்கு ட்ரை பண்ணலாம் அப்பிடிங்குறதுக்காகவே நெறைய பேர் கபடி வெளையாட வர்றாங்கன்னு சொல்றார். ஆகவே இவங்களோட வறுமைய எதுத்து நின்னு கபடி விளையாடி ஜெயிச்சு, ஒரு நல்ல வேல கெடச்சி வாழ்க்கையில முன்னுக்கு வரனும்னு ஃபிலிமிபீட் சார்பா வாழ்த்துக்களோட வேண்டிக்கிறோம்.

    English summary
    All of the lady players who played the Kennedy Club movie have really played and won the prize more than 6 times in Kabaddi game.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X