விஜய் படங்களை கேரள சூப்பர்ஸ்டார் படம்போல கொண்டாடும் ரசிகர்கள்.. பிரித்விராஜ் பாராட்டு!

சென்னை : நடிகர் விஜய்யின் மாஸ் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

Recommended Video

பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளித்த Prithviraj| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat

தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அவரது அனைத்துப் படங்களும் கேரளாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. ரசிகர்களின் அதிகமான கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றன.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த ஹிட் நம்பர்ஸ் வெளியாகி வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அவரது பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றது. ஆனாலும் வசூலில் சொதப்பவில்லை. மாறாக ஏறக்குறைய 230 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்தப் படம்.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது. தமிழில் மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, நார்த் இந்தியா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. சர்வதேச அளவிலும் வெளியானது பீஸ்ட். இந்தப் படத்திற்கு நல்ல வருவாய் கிடைக்க இதுவும் ஒரு காரணம்.

கேரளாவில் அதிகமான ரசிகர்கள்

கேரளாவில் அதிகமான ரசிகர்கள்

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது படங்கள் வெளியானால் அதை திருவிழாவாக கொண்டாட அங்கும் எராளமான ரசிகர்கள் உள்ளனர். மொழியை தாண்டி ஒரு நடிகர் ரசிக்கப்படுகிறார் என்றால் அது விஜய்யாகத்தான் இருக்க முடியும்.

கேரள சூப்பர்ஸ்டார் விஜய்

கேரள சூப்பர்ஸ்டார் விஜய்

தொடர்ந்து இந்திய அளவில் உலகளவில் எடுக்கப்படும் பல சர்வேக்களில் தமிழக அளவில், முதலிடங்களை பிடித்து விடுகிறார் விஜய். அந்த அளவிற்கு அவருக்கு ஃபேன் பேஸ் காணப்படுகிறது. இந்நிலையில் விஜய் படம் கேரளாவில் ரிலீசானால் கேரள சூப்பர்ஸ்டார் படமாக அந்தப் படத்தை கேரள ரசிகர்கள் கொண்டாடுவதாக பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

பன்முகத்திறன் மிக்க பிரித்விராஜ்

பன்முகத்திறன் மிக்க பிரித்விராஜ்

அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் அடுத்தப்படம் எப்போது துவங்கும் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கேஜிஎப் 2 படத்தையும் கேரளாவில் வெளியிட்டார். இவ்வாறு பன்முகத் திறமையை கேரளாவில் காட்டி வருகிறார்.

ஆக்ஷன் படம் கடுவா

ஆக்ஷன் படம் கடுவா

மற்ற மொழிப் படங்களிலும் இவரை அதிகமாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் கேரளாவில் மாஸ் ஆக்ஷன் படங்கள் அதிகமாக எடுக்கப்படுவதில்லை என்ற குறையை இவர் சமீபத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தில் நிவர்த்தி செய்தார். இந்நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியாகவுள்ள கடுவா படமும் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆக்ஷன் படங்கள் குறைவு

ஆக்ஷன் படங்கள் குறைவு

கேரளாவில் அதிகமாக ஆக்ஷன் படங்கள் எடுக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், தனக்கு அது போன்ற படங்களை எடுப்பதில் அதிகமான ஆர்வம் உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நபர்களின் ஈகோவை வைத்துக் கொண்டும் ஆயிரம் படங்கள் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜின் திட்டம்

பிரித்விராஜின் திட்டம்

கேரளாவில் அழுத்தமான கதைக்களத்துடன் படங்கள் எடுக்கப்படுவது சிறப்பானதே என்று கூறியுள்ள பிரித்விராஜ், ஆனால் ஆக்ஷன் படங்களுக்கும் திரைத்துறையினர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ஆக்ஷன் படங்களை பார்க்க வேண்டும என்றால் கேரள ரசிகர்கள் தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது கன்னடப் படங்களையே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையை மாற்றுவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X