நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு.. நடிகர் திலீப்குமார் விடுதலை.. ரசிகர்கள் நிம்மதி

திருவனந்தபுரம்: மலையாளம் மற்றும் தமிழில் ஃபேமஸாக இருக்கும் நடிகையை கடத்தி அவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் திலீப், சுனில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட மூன்று மாத கால சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீனில் வந்தார் திலீப். இந்நிலையில் இவ்வழக்கில் தனி நீதிபதி ஹனி வர்கீஸ் இன்று தனது தீர்ப்பை வழங்கியிருக்கிறார். நாடே இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருந்தது.

கேரளாவை சேர்ந்த நடிகை கோலிவுட்டிலும் ஃபேமஸாக இருப்பவர். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கும்பல் ஒன்று அவரது காரை மறித்து தகராறு செய்து; அவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலையும் கொடுத்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரம் அப்படி செய்துவிட்டு ஒரு இயக்குநரின் வீட்டில் இறக்கிவிட்டு சென்றது.

சுனில் கைது: இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சினிமா பாணியில் அரங்கேற்றப்பட்ட இந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக நடிகை தைரியமாக காவல் துறையில் புகார் கொடுத்தார். அப்போது அவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. இந்த இக்கட்டான நிலைமையில் அவரது கணவரும் பக்கபலமாக இருந்தார். புகாரை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினர் பல்சர் சுனில் என்பவரையும் இன்னும் சிலரையும் கைது செய்தார்கள்.

Kerala Actress Abduction Case Court Verdict actor Dileep Kumar not guilty
Photo Credit:

சிக்கிய திலீப்குமார்: சுனில் கைது செய்யப்பட்ட பிறகு அவர் நடிகர் திலீப்புக் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதை வைத்து இந்த வழக்கில் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவர; அவரிடம் விசாரணையை தொடங்கினார்கள் காவல் துறையினர். விசாரணையின் முடிவில் அவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திலீப்பும் இந்த விஷயத்தில் பங்கெடுத்த விஷயம் மிகப்பெரிய ஷாக்கை கேரள திரைத்துறைக்கு கொடுத்தது.

தனி நீதிபதி: கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கில் தனி நீதிபதியாக ஹனி வர்கீஸை கேரள அரசு நியமித்தது. இதற்கிடையே இவ்வழக்கில் திலீப்பை குற்றவாளியாக சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதேபோல் ட்விஸ்ட்டாக இந்த வழக்கில் கைதான சிலர் அரசு தரப்பு சாட்சிகளாக மாறினார்கள். இப்படி பல திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கை கடந்த எட்டு ஆண்டுகளாக விசாரித்தார் நீதிபதி ஹனி வர்கீஸ்.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு: எட்டு ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பிறகு தனது தீர்ப்பை அளித்திருக்கிறார் நீதிபதி. அதன்படி அந்தத் தீர்ப்பில், நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தீர்ப்பு திலீப்பின் ரசிகர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X