கே.ஜே.ஏசுதாசுக்கு நாளை கேரளா சட்டசபையில் பாராட்டு!

பல்வேறு மொழிகளில் அவர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இசைத்துறைக்கு வந்து 50 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி, அவரது இசை சேவையை பாராட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா, சட்டசபை வளாகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் ஏசுதாஸ் பற்றி அந்த மாநில மக்கள் தொடர்பு இலாகா தயாரித்துள்ள சத்குரு' என்ற செய்திப்படம் வெளியிடப்படுகிறது.
விழாவில் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க் கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் மற்றும் மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











