Kerala Boycott Leo: ட்ரெண்டாகும் பாய்காட் லியோ... விஜய்க்கு எதிராக மோகன்லால் ரசிகர்கள் போர்க்கொடி

சென்னை: விஜய்யின் லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக இந்தப் படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி வந்தன.

அதன் தொடர்ச்சியாக இன்றும் லியோ அப்டேட் வெளியாகும் என காத்திருந்தனர். ஆனால், லியோ அப்டேட்டுக்கு பதிலாக Kerala Boycott Leo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

 Kerala Boycott Leo: Mohanlal Fans Boycott Vijays Leo in Kerala

ட்ரெண்டாகும் Kerala Boycott Leo : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. விஜய் ரசிகர்களுக்கு ஹைப் கொடுக்கும் விதமாக, இதுவரை லியோ போஸ்டர்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக இசை வெளியீட்டு விழா தேதி, செகண்ட் சிங்கிள் அப்டேட் ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் இன்றும் லியோ அப்டேட் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், திடீரென பாய்காட் லியோ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது கேரளாவில் உள்ள மோகன்லால் ரசிகர்களால ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கேரளாவின் செல்லப் பிள்ளையாக விஜய் கொண்டாடப்படுகிறார்.

தமிழ்நாட்டில் விஜய்யின் படங்களுக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ, அதேபோல், கேரளாவிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை பார்க்க முடியும். விஜய்யின் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு ஷோ அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதிகாலை FDFS தவிர இன்னும் ஸ்பெஷல் ஷோக்கள் திரையிடவும் கேரள திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

இப்படியான சூழலில், Kerala Boycott Leo என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது, விஜய் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது காரணமே இல்லாமல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமான மோகன்லால் ரசிகர்கள், விஜய்யின் லியோவை புறக்கணிக்க வேண்டும் என Kerala Boycott Leo ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்துள்ளனர்.

மோகன்லால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், கேரள மக்கள் அனைவருமே விஜய்யின் லியோவை புறக்கணிப்பார்கள் என ட்ரெண்ட் செய்யப்படுகிறது. ஏற்கனவே விஜய்யின் லியோ இந்தி வெர்ஷன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கேரளாவிலும் மோகன்லால் ரசிகர்கள் விஜய்யின் லியோவுக்கு எதிராக Kerala Boycott Leo ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால், லியோ படக்குழுவினர் கவலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X