ஒரே ஒரு வீடியோ.. பறிபோன உயிர்.. தலைமறைவான பெண்.. சின்மயி போட்ட பதிவு.. கொந்தளித்த நெட்டிசன்ஸ்!

சென்னை: கேரள பேருந்தில் பெண் ஒருவர் தன்னிடம் ஆண் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ பதிவிட்டு இருந்தார். இது இணையத்தில் வைரலான நிலையில், கோழிக்கோட்டைச் சேர்ந்த நபர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து இருக்கும் நிலையில் பகிர்ந்துள்ள ட்வீட் நெட்டிசன்களை கோவத்தில் ஆழ்த்தி உள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் யூ என்பர் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தீபக் பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது, தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண் பயணி, ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தீபக் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தீபக் தனது உறவினர்களிடம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Kerala bus controversy Chinmayi

கேரள பேருந்து: இதையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட ஷிம்ஜிதா இணையத்தில் பிரபலமடைவதற்காக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினார் என்றும், ஷிம்ஜிதா மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு தரப்பினர் காவல் துறையை வலியுறுத்தி வருகின்றனர். இணையத்தில் வியூஸ் - ட்ரெண்டிங் மோகத்தில் அந்தப் பெண் உள்நோக்கத்துடன் வீடியோ எடுத்ததாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில், வீடியோவை பகிர்ந்த பெண் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, தீபக்கின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அப்பெண் குறித்தும், வீடியோவின் பின்னணி குறித்தும் விரிவான விசாரணை வேண்டுமென மனித உரிமைகள் ஆணையத்தை நாட உள்ளனர்.

சின்மயி ட்வீட்: இந்நிலையில் பாடகி சின்மயி அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவிப்பது போல ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், ஒரு பெண் டீனேஜ் வயதிலிருந்தே போக்குவரத்தில் எண்ணற்ற ஆண்கள், பள்ளிப் பிரார்த்தனைக் கூட்ட வரிசையில் சிறுவர்கள், ஒரு டீனேஜ் பெண்ணின் மார்பில் முழங்கையால் இடிப்பதற்காக 'தங்கள் பெல்ட்டை சரிசெய்வது' போல பாசாங்கு செய்கிறார்கள். எத்தனை ஆண்கள் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள், தவறாகத் தொட்டிருக்கிறார்கள், அநாகரிகமாக நடந்துகொண்டிருக்கிறார்கள், கேலி செய்திருக்கிறார்கள் அல்லது நேரடியாகத் தாக்கியிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு யோசனையைத் தருவதற்காக, பெண்கள் அந்த ஆண்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும். இவர்களில் எத்தனை பேர் சிறையில் இருந்திருக்க வேண்டும், ஆனால் வெளியே 'அழகான மனைவியை மணந்த, குழந்தைகளுடன் மற்றும் வயதான பெற்றோருடன் வாழும் மரியாதைக்குரிய மனிதர்களாக' வலம் வருகிறார்கள் என்பதை இது உணர்த்துகிறது என பதிவிட்டு உள்ளார்.

அந்த பதிவினை பார்த்த சிலர், சின்மயி கருத்த கண்டித்து வருகின்றனர். நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் பேருந்து கூட்டமாக இருந்தால், ஏன் பயணிக்க வேண்டும்? நீங்கள் பயணம் செய்தால்,கூட்டத்தில் பெண்கள் மீது உடல் படுவடுவதை தடுக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவை நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள். பெண்களுக்காக பேம் நீங்கள், ஏன், ஆண்கள் சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பீப்பாய்களில் அடைத்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றி ஏன் பேசவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X