twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தாரா ‘வராஹ ரூபம்‘ பாடலுக்கு தடை நீக்கம்..நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

    |

    கேரளா : காந்தாரா படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடலான வராஹ ரூபம் பாடல் மீதான தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

    கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியான படம் வசூலை வாரிக்குவித்தது.

    இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

    காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி? காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி?

    காந்தாரா

    காந்தாரா

    காந்தாரா கன்னட திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தை பார்த்து வியந்து போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி, பிருத்விராஜ், ரஜினிகாந்த் என அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என படத்தை வெகுவாக புகழ்ந்து பாராட்டினர்.

    வராஹ ரூபம் பாடல் சர்ச்சை

    வராஹ ரூபம் பாடல் சர்ச்சை

    இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும், வராஹ ரூபம் பாடல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி மெய் சிலிர்க்க வைத்தது. கேரளாவை சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவால் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக்குழு யூட்டியூபில் வெளியிட்டிருந்த நவரசம் பாடலும் வராஹ ரூபம் பாடலும் ஒன்றாக இருப்பதாக காப்புரிமை சர்ச்சை கிளம்பியது. இதை அடுத்து தாய்க்குடம் பிரிட்ஜ் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை நாடினர்.

    ரசிகர்கள் ஏமாற்றம்

    ரசிகர்கள் ஏமாற்றம்

    இதையடுத்து, வராஹ ரூபம் பாடலை ஒளிபரப்ப தடைவிதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து அமேசான் பிரைமில் வெளியான கந்தாரா திரைப்படத்தில் வராஹ ரூபம் பாடலின் ஒரிஜினல் டிராக் மாற்றி அமைக்கப்பட்டு வெளியிட்டு இருந்தது இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    பாடலுக்கு தடை நீங்கியது

    பாடலுக்கு தடை நீங்கியது

    இதையடுத்து, அவ்வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வராஹ ரூபம் பாடலுக்கான தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது தாய்க்குடம் பிரிட்ஜ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற எல்லை வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேநேரம் எர்ணாகுளத்தில் உள்ள கமர்சியல் நீதிமன்றத்தில் அடுத்த 14 நாட்களுக்குள் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினர் முறையீடு செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டுதலையும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பழைய வராஹ ரூபம் பாடலை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    English summary
    Kerala court has lifted the restriction against the makers of Kantara from using Varaha Roopam song.Rishab Shetty’s Kantara was released on Amazon Prime Video on November 24.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X