29 லட்சத்தை திருப்பி தர மறுக்கும் சன்னி லியோன்.. கேரள போலீசார் விசாரணை.. சன்னியின் பதில் என்ன?

திருவனந்தபுரம்: குடும்பத்துடன் கேரளா வந்துள்ள சன்னி லியோன் மீது தொடரப்பட்டுள்ள மோசடி புகார் மீது கேரள போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

ஆபாச பட நடிகையாக உலக ஃபேமஸ் ஆன சன்னி லியோன், பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக தற்போது வலம் வருகிறார்.

தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார் சன்னி லியோன்.

குடும்பத்துடன் கேரளாவில்

குடும்பத்துடன் கேரளாவில்

லாக்டவுன் நேரத்தில் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்த சன்னி லியோன், தற்போது கேரளாவில் தனது குடும்பத்துடன் சுற்றுலா செய்து வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான ஏகப்பட்ட கிளாமர் போட்டோக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

29 லட்சம் மோசடி

29 லட்சம் மோசடி

இந்நிலையில், கேரளாவில் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக சன்னி லியோன் சுமார் 29 லட்சங்களை பெற்றுக் கொண்டு திருப்பி தரவில்லை என பெரும்பாவூரைச் சேர்ந்த ஆர். ஷியாஸ் கேரள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்த மோசடி வழக்கு தொடர்பாக கேரளாவில் சுற்றுலா செய்து வரும் நடிகை சன்னி லியோனிடம் நேற்று கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். அப்போது, கொரோனா பரவல் காரணமாகவும் சொன்ன தேதியை தாண்டி 5 முறை நிகழ்ச்சியை அவர்கள் மாற்றி அமைத்ததாலும் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி நடந்தால்

நிகழ்ச்சி நடந்தால்

மேலும், இத்தனை முறை நிகழ்ச்சி மாற்றி அமைந்ததால், தன்னுடைய கால்ஷீட் தேதிகள் எல்லாம் வீணாய் போனது என புகார் அளித்தவர் பேரிலேயே குற்றம்சாட்டி உள்ளார் சன்னி லியோன். விரைவில் தள்ளி வைக்கப்பட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டால் தான் கலந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை

இருதரப்பு பேச்சுவார்த்தை

சன்னி லியோனின் இந்த அதிரடி வாக்குமூலத்தை தொடர்ந்து இரு தரப்பினருடனும் சுமூக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கேரள போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எம்டிவியின் ஸ்ப்லிட்ஸ் வில்லா நிகழ்ச்சிக்காக தற்போது கேரளாவில் ஷூட்டிங்கும் செய்து வருகிறார் சன்னி லியோன். அந்த வீரமாதேவி என்ன ஆச்சுங்கோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X