லியோ ரிலீஸுக்கு முன் விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்.. வாரிசு படமே நஷ்டமாம்.. விநியோகஸ்தர் கடிதம்!

சென்னை: தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்த விநியோகஸ்தர் வாரிசு படம் தனக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக எழுதிய கடிதம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் இதுவரை எந்தவொரு தமிழ் படங்களும் செய்யாத அளவுக்கு 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கேரளா விஜய் கோட்டை என சொல்லி வந்த நிலையில், அங்கேயே வாரிசு படம் 3 கோடி வரை நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விநியோகஸ்தர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Kerala distributor writes a letter to Vijay for Varisu loss

இதுகுறித்து முன்னதாக தயாரிப்பாளர் தில் ராஜுவை அணுகிய நிலையிலும், அவர் எந்த உதவியும் செய்யவில்லை என விநியோகஸ்தர் கூறியுள்ளார்.

300 கோடி வசூல்: விஜய்யின் வாரிசு திரைப்படம் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக 300 கோடி எட்டியதாக தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்து இருந்தார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு படமும் சொதப்பிய நிலையிலும், விஜய் நடித்த நிலையில், வசூலுக்கு பாதிப்பில்லை எனக் கூறப்பட்டது.

3 கோடி நஷ்டம்: ஆனால், திடீரென தற்போது கேரளாவை சேர்ந்த விநியோகஸ்தர் ராய் வாரிசு படத்தை வாங்கி வெளியிட்ட தனக்கு லாபம் கிடைக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக சுமார் 3 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் நடிகர் விஜய் தயவு செய்து உதவுமாறு விநியோகஸ்தர் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எர்ணாகுளத்தை சேர்ந்த ராய் வாரிசு படத்தின் உரிமையை வாங்கி வெளியிட்ட நிலையில், படத்திற்கு கூடுதல் முன்பணமாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கவில்லை எனவும், தான் அளித்த பணத்திற்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த பிரச்சனைக்கு சீக்கிரமே சுமுகமான முறையில் நடிகர் விஜய் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய உதவுமாறு கேட்டுள்ளார்.

லியோவுக்கு சிக்கல்: விஜய்யின் வாரிசு படம் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்ததாக வெளியாக உள்ள விஜய்யின் லியோ படத்துக்கு சிக்கல் ஏற்படுமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X