தமிழ்நாட்டில் கூட இல்லை.. அசுரனுக்கு கேரளாவில் இப்படியொரு ரசிகரா?

Recommended Video

PROMO : ASURAN TEAM | MANJU WARRIER | KEN KARUNAS SPECIAL INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் அப்பா சிவசாமியின் லுக்கில் கேரளாவை சேர்ந்த தனுஷ் ரசிகர் ஒருவர் எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரளா: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்த படம் அசுரன்.

அசுரனில் தனது மகன் சிதம்பரத்தை காப்பாற்ற காட்டில் சிவசாமி தனுஷ் சண்டையிடும் லுக்கில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்படியே போட்டோஷூட் செய்துள்ளார்.

100 கோடி வசூல்

100 கோடி வசூல்

தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலே அசுரன் படம் தான் அவருக்கு 100 கோடி வசூல் நாயகன் அந்தஸ்த்தை தமிழில் கொடுத்துள்ளது. இந்தியில் வெளியான ராஞ்சனா மற்றும் ஹாலிவுட்டில் வெளியான பக்கிரி படங்களும் 100 கோடி வசூலை தனுஷுக்கு ஈட்டித்தந்துள்ளன.

அசுரன் அரசியல்

அசுரன் அரசியல்

எளியவர்களை வலியவர்கள் அடக்கி ஆள்வதும், அதை எதிர்த்து எளியவர்கள் போராடி ஜெயிப்பதும் என்ற அரசியலை அசுரன் படம் அழகாக கையாண்டது இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. பஞ்சமி நிலம் குறித்த காட்சிகளும், தற்போது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

கேரள ரசிகர்

கேரள ரசிகர்

அசுரன் படம் திரையரங்குகளில் மாபெரும் வசூல் வேட்டையை நிகழ்த்தி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டு ரசிகர்கள் கூட செய்யாத அளவுக்கு கேரளாவை சேர்ந்த அரவிந்த் எஸ்.ஆர்.கே, அப்பா சிவசாமியின் வெறித்தனமான வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. சரத் மோகன் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

தேசிய விருது கிடைக்குமா?

வடசென்னை, ராட்சசன், 96, 2.0, பரியேறும் பெருமாள், மேற்கு தொடர்ச்சி மலை என கடந்த ஆண்டு வெளியான பல நல்ல தமிழ் படங்களுக்கு இந்த ஆண்டு தேசிய விருதில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு அசுரன் படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X