தமிழ் ரசிகர்களை மிஞ்சிய கேரள பெண் ரசிகை..! வைரலாகும் போட்டோ

By Vignesh Selvaraj

கொச்சின் : அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு மற்றும் பலரது நடிப்பில், பல தடைகளைக் கடந்து வெற்றிகரமாக ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பி வருகிறது 'மெர்சல்' படம்.

விஜய்க்கு தமிழகத்தில் எப்படி ஒரு ரசிகர்கள் பலம் உள்ளதோ அதே அளவிற்கு கேரளாவிலும் பெரிய ரசிகர் படை உள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் ரசிகர்களை விட கேரளாவில் வெறித்தனமாக விஜய்யைக் கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள்.

kerala female fan celebrates mersal

அந்த வகையில், நேற்று மெர்சல் உலகம் முழுவதும் வெளிவர, கேரளாவில் எங்கு திரும்பினாலும் விஜய் பேனர், போஸ்ட்டர்தான் சூழ்ந்திருக்கின்றன. தமிழ் நடிகர்களில் விஜய்க்குதான் மலையாளத் திரையுலகில் மார்க்கெட் அதிகம்.

கேரளாவில், 'மெர்சல்' திரையிட்ட அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் தான். படத்தின் புக்கிங் தொடங்கி, முதல்நாள் காட்சிகளின் போதும் ரசிகர்கள் தியேட்டர்களைச் சூழ்ந்திருந்தனர். விஜய் கட்-அவுட், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.

kerala female fan celebrates mersal

கேரளாவின் ஒரு திரையரங்கில், விஜய்க்காக ஒரு ரசிகை கட்-அவுட் மீது ஏறி பூக்களைக் கொட்டியுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. இந்தப் புகைப்படம், பெண்களுக்கு விஜய் மீதான க்ரேஸ் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X