twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேற வழியே இல்லை..பிரபல ஹீரோக்கள் சம்பளத்தை குறைச்சே ஆகணும்..சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு!

    By
    |

    கொச்சி: ஹீரோக்களும் டெக்னீஷியன்களும் தங்கள் சம்பளத்தை குறைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

    கொரோனா லாக்டவுனால் உலகம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றன.

    இருந்தாலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    'சக்ரா' டீஸர் விரைவில்..விஷாலின் கால சக்கரத்தை மாற்றுமா .. ரசிகர்கள் ஆர்வம் !'சக்ரா' டீஸர் விரைவில்..விஷாலின் கால சக்கரத்தை மாற்றுமா .. ரசிகர்கள் ஆர்வம் !

    சினிமாதுறை

    சினிமாதுறை

    லாக்டவுன் காரணமாக தொழில்துறை கடுமையானப் பாதிப்பை சந்தித்துள்ளன. பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. சினிமா இன்டஸ்ட்ரியும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், கடும் பொருளாதார சிக்கலில் சினிமா துறையினர் உள்ளனர்.

    நடிகர், நடிகைகள்

    நடிகர், நடிகைகள்

    பைனான்ஸ் வாங்கி படம் தயாரித்துள்ளவர்கள் வட்டி கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் கேரளத் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர், நடிகைகளும் டெக்னீஷியன்களும் தங்கள் சம்பளத்தில் பாதியை குறைக்க வேண்டும் என்று, முன்பு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், இந்தச் சங்கத்தின் கூட்டம் கொச்சியில் நேற்று நடந்தது.

    வெளிநாட்டு உரிமை

    வெளிநாட்டு உரிமை

    கூட்டத்துக்குப் பின் பேசிய சங்கத்தின் தலைவர் எம்.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செலவுகளைக் கட்டுப்படுத்தாமல் படத் தயாரிப்புகளை தொடர்வது இனி கடினம். கடந்த ஆண்டு வெளியான படங்களில் வெறும் 6 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன. மற்ற படங்கள் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகளால் தப்பிக்க முடிந்தது.

    தியேட்டர் வருமானம்

    தியேட்டர் வருமானம்

    அதை இனியும் எதிர்பார்க்க முடியாது. லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்தாலும் கூட்டம் வருமா என்று தெரியாது. தியேட்டர் வருமானம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் செலவுகளை 50 சதவிகிதம் குறைத்தால் மட்டுமே படங்களைத் தயாரிக்க முடியும். இதுதொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா), மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (பெஃப்கா), தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்துடன் விவாதிக்க இருக்கிறோம்.

    எத்தனை சதவிகிதம்

    எத்தனை சதவிகிதம்

    இந்த நெருக்கடி அவர்களுக்கும் தெரியும் என்பதால், இதற்கு உடன்படுவார்கள் என்று நம்புகிறோம். நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். எத்தனை சதவிகிதம் என்பதை நாங்கள் குறிப்பிடவில்லை. மற்ற அமைப்புகளுடன் பேசியபின் இது பற்றி முடிவு செய்யப்படும். இவ்வாறு கூறியுள்ளார். மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ், திலீப், மஞ்சுவாரியர் உட்பட பலர் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர்.

    English summary
    Kerala film Producers Association president M Renjith says, Actors should reduce remuneration, won't produce films unless cost is halved'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X