twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகைகள் எதிர்ப்பை மீறி அந்த நடிகரை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கும் கேரள அரசு.. பரபரப்பு!

    விருது விழாவுக்கு, நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலுக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    |

    திருவனந்தபுரம்: விருது விழாவுக்கு, நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலுக்கு கேரள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் சேர்க்க மோகன்லால் முன்வந்தார். இதற்கு சக நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விலகினார்கள். அவருக்கு எதிராக மலையாள நடிகைகள் ஒன்று திரண்டுள்ளனர். நடிகைகள் ரேவதி, பத்மபிரியா உள்ளிட்ட நடிகைகள் மோகன்லால் முடிவை விமர்சித்து கடிதம் அனுப்பினார்கள்.

    நடிகைகள் எதிர்ப்பு

    நடிகைகள் எதிர்ப்பு

    நடிகர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அழைப்பு வரவில்லை

    அழைப்பு வரவில்லை


    மோகன் லாலை விருது வழங்கும் விழாவுக்கு அழைக்கக்கூடாது என திரைப்படத்துறையை சேர்ந்த 107 பேர் கையெழுத்திட்டு முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பினர். இதனிடையே மோகன்லால் இதுவரை அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்றார்.

    முறைப்படி அழைப்பு

    முறைப்படி அழைப்பு

    இந்த நிலையில் மோகன்லாலுக்கு நேற்று முறைப்படி அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகைகள் அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைத்து இருப்பது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Kerala govt invites Mohanlal for the award fuction. Actress opposing Mohan lal to participate in the award function.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X